அர்ஜுன் வேணாமாம்.. அஷ்வினுக்கு ஆசைப்படும் அணு...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் அர்ஜுன், தனது வீட்டில் இறந்து போன அக்காவின் மகள் என்று அடைக்கலமாகி இருக்கும் அணு, பையா கணேஷ் கொலை கேசில் குற்றவாளி என்று கண்டுபிடிச்சுட்டான்.
பையா கணேஷ் கொலை கேசில் ஆஸ்ரமத்தில் வளர்ந்த அணுவுக்கும் சாக்ஷிக்கும் சம்பந்தம் இருக்குன்னு கண்டு பிடிச்சுட்டான் அர்ஜுன்னு தெரிஞ்சு அணுவுக்கு அட்வைஸ் பண்றா சாக்ஷி.
அதாவது அர்ஜுன் தம்பி அஷ்வினை அணு கல்யாணம் செய்துகிட்டா இந்த கொலை கேஸிலிருந்து நீ தப்பிச்சுருவே அணு... நானும் மாட்டிக்க மாட்டேன்னு சொல்றா.

அணுவுக்கு இப்போ
இப்போ அணுவுக்கு, இத்தனை நாள் அர்ஜூன் மாமா வேணும்னு சொல்லிட்டு, இப்போ திடீர்னு அஷ்வின் மாமா வேணும்னு எப்படி டிராமா போடறதுன்னு யோசனை. பாட்டி எனக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தமே இல்லாம போயிரும் போலிருக்கேன்னு பாட்டிகிட்ட அழறா அணு.

அணு அழ கூடாது
அணு எதுக்கு அழறே..நீ அழக்கூடாது...அர்ஜுன் இல்லேன்னா என்ன...என் பேரன் அஷ்வின் இருக்கான்ல அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு உரிமையோடு வந்து நீ வாழலாம் கண்ணுன்னு பாட்டியே எடுத்து குடுத்துடறாங்க.

காதலில் அஷ்வின்
அஷ்வின் தன் அப்பாவோட ஃபிரண்டு பொண்ணுதான்னு தெரியாமல் முகத்தைப் பார்க்காமல் இடுப்பில் இருந்த மச்சத்தை மட்டும் பார்த்து அவளை காதலிக்கறான். அந்த பொண்ணை கண்டுபிடிச்சு,அவளோட போட்டோவை ரோஜா வாங்கி அஷ்வினிடம் குடுக்கறா/ இன்னிக்கு மாலை அஷ்வின், அந்த பொண்ணு, ரோஜா மூணு பேரும் சந்திக்க போறாங்க.

நடிக்கறா அணு
அதுக்குள்ளே வீட்டில் அணு நடிக்க ஆரம்பிச்சு, அஷ்வினை எப்படியும் கல்யாணம் செய்துக்கணும்னு , பூஜை, கந்தர் சஷ்டி கவசம்.. சாம்பிராணி எல்லாம் போட்டு வீட்டையே தன் வசம் கொண்டுவந்துவிட நினைக்கறா. அணு... எல்லாரும் உன்னோட நடிப்பை நம்பலாம்..ஆனா, நான் .நம்பமாட்டேன்.பையா கணேஷ் கொலை கேசில் நீ உள்ளே போவது உறுதி.

அஷ்வினுக்கு எப்படி
இப்படிப்பட்ட உன்னை அஷ்வினுக்கு கல்யாணம் செய்து வைக்க நான் எப்படி சம்மதிப்பேன்? நான் இந்த குடும்பத்துக்கு மருமக. உன்னை மாதிரி பொண்ணை கல்யாணம்பண்ணி வச்சு இந்த குடும்பத்தோட மானம் போக ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன்னு சொல்றா ரோஜா.


Click it and Unblock the Notifications











