பிக் பாஸ் மாதிரியே ஏமாற்றிய அவரின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா

By Siva

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டின் கதவு திறந்திருந்தும் இந்த ஐஸ்வர்யா வெளியே செல்லாதது பார்வையாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் ஓவராக சீன் போட்டுக் கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா. சும்மா எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு தையா, தக்கா என்று குதித்து காட்டு கத்து கத்துகிறார்.

அவர் கத்துவதை பார்த்த உடனே பார்வையாளர்கள் சேனலை மாற்றிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்கிறார்.

கமல்

கமல்

ஐஸ்வர்யா என்ன கத்தினாலும், பிராடுத்தனம் செய்தாலும் அவரை காப்பாற்றியேத் தீருவேன் என்று இருக்கிறார் பிக் பாஸ். ஐஸ்வர்யா செய்யும் அட்டூழியங்களை கமல் ஹாஸன் கூட தட்டிக் கேட்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. கமல் கேட்கவில்லையா, இல்லை கேட்கக் கூடாது என்று அவருக்கு உத்தரவா என்று தெரியவில்லை.

பாலாஜி

பாலாஜி

பிக் பாஸ் வீட்டின் கதவை 5 நிமிடங்கள் திறந்து வைக்கிறேன் வெளியே செல்வோர் செல்லலாம் என்று கமல் தெரிவித்த மறு நிமிடமே ஐஸ்வர்யா பெரிய இவரு மாதிரி கிளம்பினார். உடனே பாலாஜியும், மகத்தும் பதறியடித்துக் கொண்டு வந்து ஐஸ்வர்யாவை தடுத்து நிறுத்தினார்கள். இதற்கிடையே நான் வேண்டுமானால் போகிறேன் என்று தாடி பாலாஜி தனி பெர்ஃபாமன்ஸ் வேறு.

கோபம்

கோபம்

என்னுள் இருக்கும் நல்ல குணங்கள் வெளியே வரவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது. கோபம் வந்து கத்துகிறேன். அதனால் நான் போகிறேன். இது என் எதிர்காலத்திற்கு நல்லது இல்லை என்று கூறிய ஐஸ்வர்யாவை போகாதம்மா என்று கெஞ்சுகிறார் மகத். யாஷிகா சரியாக பேசுவது இல்லை என்பதால் மகத்திற்கு ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும்.

பாசம்

பாசம்

கதவு திறந்து கிடக்கு, தயவு செய்து போயிடும்மா என்று பார்வையாளர்கள் கூறினார்கள். ஆனால் ஐஸ்வர்யா வெளியே செல்லவில்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் கமல் ஹாஸன் கூட ஐஸ்வர்யாவுக்கு ஆதரவளிக்கிறார். மகத், ஐஸ்வர்யா கோபப்படுவதை கமல் ஹாஸன் கண்டிப்பார் என்று எதிர்பார்த்தால் பாசமாக பேசி பார்வையாளர்களை ஏமாற்றிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X