வாவ்.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள இன்னைக்கும் கெஸ்ட்.. யாருன்னு பாருங்க மக்களே பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஒரு விருந்தாளி வந்திருப்பது ஹவுஸ்மேட்ஸ்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் கன்டென்ட் கிடைக்காமல் விழிபிதுங்கி வரும் பிக்பாஸ், ஸ்பான்சர்களை அடிப்படையாக அவைத்து டாஸ்க் கொடுத்து வருகிறார்.
மேலும் கடந்த சீசன்களின் போட்டியாளர்களை விருந்தாளிகளாக வரவழைத்து, அவர்களை விட்டு அட்வைஸ் செய்ய வைப்பது, அவர்களின் படங்களின் போஸ்டர்களை வெளியிடுவது, டீசர் வெளியிடுவது, ட்ரெயிலர் வெளியிடுவது என ஒப்பேத்தி வருகிறார்.

இன்றைய விருந்தாளி
மகத், யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர், ரித்திவிகா என கடந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் இந்த கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்றனர். அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் கடந்த சீசனில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா விருந்தாளியாக வந்துள்ளார்.

கவர்ச்சி தூக்கலாக ஒய்யார நடை
நீல நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக ஒய்யாரமாக நடந்து வந்த ஐஸ்வர்யா தத்தா, சாண்டியின் கழுத்தை பிடித்து ஒரு சுற்று சுற்றினார். பின்னர் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கைக்கொடுத்தும் கட்டிப்பிடித்தும் தனது வருகையை பதிவு செய்தார்.

ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஆட்டம்
தொடர்ந்து குரு படத்தின் பாடலுக்கு ஹவுஸ்மேட்ஸ்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா, பிக்பாஸ்க்கு பிறகு தனக்கு 5 படங்கள் கிடைத்ததாக கூறுகிறார். இதையடுத்து தனது படத்தின் போஸ்டரை ஹவுஸ்மேட்ஸ்களை வெளியிட சொல்கிறார் ஐஸ்வர்யா தத்தா. இவ்வாறாக முடிகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ.
நல்லவங்க இல்லையே!
என்ன விடாம புரமோ போட்டுக்கிட்டே இருக்கிங்க பிக்பாஸ் என்று கேட்டுள்ள நெட்டிசன்கள் நீங்க அவ்ளோ நல்லவங்க இல்லயே என்றும் கலாய்த்துள்ளனர்.
கவின் ஃபீல் பண்ணுவான்
மேலும் ஐஸ்வர்யா தத்தா வந்துள்ள புரமோவை பார்த்த நெட்டிசன்கள், என்ன பிக்பாஸ் கவின் வெளியே போன பிறகு இப்படி பண்ணீட்டிங்க, கவின் எவ்ளோ ஃபீல் பண்ணுவான் என்று கேடுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











