படுக்கையில் நடந்தது என்ன?: பொன்னம்பலத்துடன் மல்லுக்கட்டும் ஐஸ்வர்யா
Recommended Video

சென்னை: படுக்கையில் என்ன நடந்தது என்று கூறுமாறு கேட்டு பொன்னம்பலத்துடன் சண்டைக்கு பாய்ந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா-ஷாரிக், மகத்-யாஷிகா நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. பார்வையாளர்கள் என்ன சொல்ல நினைத்தார்களோ அதை தான் பொன்னம்பலம் கமலிடம் கூறினார்.
உண்மையை சொன்ன பாவத்திற்கு பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா
படுக்கையில் என்ன நடந்தது என்று கேட்டு ஐஸ்வர்யா பொன்னம்பலத்துடன் மோதும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. யாஷிகாவும் தனது தோழிக்காக மல்லுக்கட்டுகிறார்.

ஷாரிக்
படுக்கையில் என்ன நடந்தது என்று பொன்னம்பலத்திடம் ஏன் கேட்கிறீர்கள் ஐஸ்வர்யா. அங்கு என்ன நடந்தது, நடக்கிறது என்பதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்.
வாழ்த்து
பொன்னம்பலத்தின் பேச்சை கேட்டு யாஷிகா, ஐஸ்வர்யா வேண்டுமானால் கடுப்பாகலாம். ஆனால் கமல் உள்பட பார்வையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாவி
பொன்னம்பலத்தை சிறைக்கு அனுப்ப ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று ஓவர் சீன் போடுகிறார்கள் சக போட்டியாளர்கள். இது உலக மகா நடிப்புடா சாமி.
டேனி
பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.


Click it and Unblock the Notifications











