தொட்டுப் பார், நடக்கிறதே வேற: ஆள் தெரியாமல் உதாரு விடும் ஐஸ்வர்யா
Recommended Video

சென்னை: ஐஸ்வர்யா ஆள் தெரியாமல் உதாரு விடுகிறார்.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யாவை பார்த்து பார்வையாளர்கள் கடுப்பான காலம் போய் தற்போது அவரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். டி.ஆர்.பி.யை ஏற்றுவதற்காக பிக் பாஸ் ஐஸ்வர்யாவை பேய் மாதிரி கத்தவிட்டு அவர் அப்படியே ஆகிவிட்டார் என்ற பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
அதற்காக ஐஸ்வர்யாவை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற யாரும் விரும்பவில்லை.
செய்யாதே
டாஸ்கின்போது ஐஸ்வர்யா அத்துமீறி நடந்து கொள்ளும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுர மொக்கையாக உள்ளது. சின்னப்புள்ளத்தனமாகவே டாஸ்க் கொடுக்கிறார்கள். மாத்தி யோசிங்க பாஸு.
விஜி
வா, வா என்று விஜியை வம்புக்கு இழுக்கிறார் ஐஸ்வர்யா. இதை பார்த்த விஜியோ ஐயோ பயமா இருக்கு ஐஸ்வர்யா என்று நக்கல் செய்து அவருக்கு வெறியேற வைக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ப்ரொமோ வீடியோ எடிட்டிங்கில் காட்டும் கவனத்தை நிகழ்ச்சியில் காட்டினால் அள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
கதறல்
ஐஸ்வர்யா பேய் கத்து கத்தும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. கத்தாதே என்று விஜி சொல்ல அப்படித் தான் கத்துவேன் என்று ஐஸ்வர்யா கூறுகிறார். ஐஸ்வர்யாவாலேயே பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் புரியவில்லை.
சைக்கோ
பிக் பாஸின் செல்லக்குட்டியான ஐஸ்வர்யா பற்றி பார்வையாளர்கள் நினைப்பது இது தான்.


Click it and Unblock the Notifications











