நேத்து நீலிக் கண்ணீர் வடித்த ஐஸ்வர்யா இன்று செய்த காரியத்தை பார்த்தீங்களா?
Recommended Video

சென்னை: ஐஸ்வர்யா பழையபடி சண்டக்கோழியாக மாறியுள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளவர்களில் ஐஸ்வர்யாவும் அடக்கம். நாமினேட் செய்யப்பட்டதும் பாவம் போன்று நீலிக் கண்ணீர் வடித்து சீன் போட்டார்.
இந்நிலையில் மீண்டும் பழையபடி சண்டக்கோழியாகி மல்லுக்கட்டுகிறார்.
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா தாடி பாலாஜியுடன் மோதும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. உங்கம்மாவை நான் வந்து மன்னிப்புக் கேட்கச் சொன்னேனா. கேட்டை தாண்டிப் போய்விட்டால் எல்லோரும் வேறு வேறு தான் என்று ஐஸ்வர்யாவை அதட்டினார் பாலாஜி. உங்க மிரட்டலுக்கு எல்லாம் அவர் பயப்பட மாட்டார் பாலாஜி.
விஜயலட்சுமி
ஐஸ்வர்யா பெரிய இவராட்டம் சண்டை போடும் மற்றொரு ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் அவர் பீட்டர் விட பதிலுக்கு விஜயலட்சுமியும் பீட்டர் விட்டார்.

அனுப்புங்க
வர வர ஐஸ்வர்யா பேசினால் இல்லை அவரை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது. தயவு செய்து அவரை விரட்டிவிட்டுட்டு மறு வேலையை பாருங்க பிக் பாஸ். சும்மா விதிமுறைகளை மாற்றி ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்த்து ஐஸவர்யாவை காப்பாற்றிவிட வேண்டாம். ஐஸ்வர்யா மீது பார்வையாளர்கள் எவ்வளவு கோபத்தில் உள்ளார்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

பார்வையாளர்கள்
பார்வையாளர்கள் தான் முக்கியமானவர்கள் என்று வார இறுதி நாட்களில் கமல் ஹாஸன் கூறுகிறார். ஆனால் வாரம் முழுக்கு அந்த பார்வையாளர்களை பிக் பாஸ் மதிப்பதே இல்லை. அதுவும் ஐஸ்வர்யா, யாஷிகா விஷயத்தில் பார்வையாளர்களை கண்டுகொள்வதே இல்லை. அப்படி இருக்கும்போது நீங்க மட்டும் ஏன் சார், சும்மா பில்ட்அப் கொடுக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications











