ஷாரிக்கிற்கு ஏற்கனவே காதலி இருக்கிறாராம்: அழுது புலம்பும் ஐஸ்வர்யா
Recommended Video

சென்னை: ஷாரிக்கிற்கு காதலி இருக்கும் விஷயம் தெரிந்து ஐஸ்வர்யா தத்தா அப்செட்டாக உள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் ஒன்னு புருஷன், பொண்டாட்டி சண்டையை காட்டுகிறார்கள், இல்லை என்றால் காதல் விவகாரத்தை காட்டுகிறார்கள். ஐஸ்வர்யா தத்தாவிடம் உருகி உருகி பேசிய ஷாரிக் ஹஸனுக்கு காதலி இருக்கிறாராம்.
தன்னுடைய காதல் முறிந்துவிட்டதாக ஷாரிக் யாஷிகாவிடம் கூறியுள்ளார்.

குடும்பம்
இரண்டரை ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்ததாகவும் குடும்ப பிரச்சனையால் பிரிந்துவிட்டதாகவும் யாஷிகாவிடம் கூறினார் ஷாரிக். அந்த பெண் தெலுங்கு பேசுவார் என்று மேலும் கூறினார்.

மகத்
காதலியின் பெயர் A என்ற எழுத்தில் துவங்கும் என்றார் ஷாரிக். அந்த நேரம் அங்கு மகத் வரவே காதலியின் பெயரை பின்னர் கூறுமாறு ஷாரிக்கிடம் தெரவித்தார் யாஷிகா.

கவலை
ஷாரிக் காதல் பிரேக்கப் ஆகிவிட்டது என்கிறார் ஆனால் அந்த பெண்ணோ அவருக்கு பிக் பாஸ் வீட்டிற்கே உடைகள் அனுப்பி வைத்து நான் இன்னும் இருக்கிறேன் என்று நினைவூட்டியுள்ளார். இதை பார்த்த ஷாரிக்கிற்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆகிவிட்டது.

ஐஸ்வர்யா
ஷாரிக்கிற்கு ஏற்கனவே காதலி இருப்பது தெரிந்து ஐஸ்வர்யா அப்செட்டாகியுள்ளார். அதை நினைத்து அழுகிறார். பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியே செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இந்த காதல் தோல்வி, வெளியே செல்ல விரும்புவதை எல்லாம் பார்த்தால் உங்களுக்கு ஓவியா விவகாரம் நினைவுக்கு வரவில்லையா வாசகர்களே?

காதல் காட்சிகள்
பிக் பாஸ் முதல் சீசனில் நடந்தது போன்றே இரண்டாவது சீசனிலும் காதல் உருவாகி, தோல்வி அடைந்துள்ளதை பார்த்தால் இன்னும் ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்தவே இல்லை போலயே. சரி விடுங்க, அது அவங்க பிரச்சனை.


Click it and Unblock the Notifications











