சக போட்டியாளரிடம் ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா #BiggBoss2Tamil

By Siva

சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர் ஒருவரிடம் ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்தார் ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் வீட்டில் வெங்காயத்தால் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அதன் பிறகு ஐஸ்வர்யா தத்தா அணியும் உடைகள் பற்றி ஹவுஸ் கேப்டனான ஜனனி ஐயர் குறை கூறினார்.

ஜனனி பேசிய விதம் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நான் எந்த உடை அணிந்தாலும் கமெண்ட் பண்றீங்க. அது தெரியுது, இது தெரியுதுன்னு நீங்கள் சொல்வது எனக்கு பிடிக்கவில்லை என்று ஐஸ்வர்யா ஜனனியிடம் கூறினார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஐஸ்வர்யா இப்படி படக்கென்று கேட்பார் என்று எதிர்பார்க்காத ஜனனி அதிர்ச்சி அடைந்தார். உடனே சுதாரித்துக் கொண்டு வீட்டில் உள்ள பையன் என்னிடம் வந்து சொன்னதை தான் உங்களிடம் கூறினேன் என்று சமாளித்தார் ஜனனி. அந்த பையன் யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார் அவர்.

மோதல்

மோதல்

நீங்கள் கூட தான் ஜம்ப் சூட் போட்டபோது தெரிந்தது, நான் ஏதாவது கூறினேனா என்று ஐஸ்வர்யா ஜனனிக்கு பதிலடி கொடுத்தார். இதை கேட்ட ஜனனி சொல்ல வேண்டியது தானே என்று கூறி அழத் துவங்கிவிட்டார்.

முத்தம்

முத்தம்

ஜனனி அழுது முடித்துவிட்டு மேக்கப் போட்டபோது அறைக்குள் வந்த ஐஸ்வர்யா அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன் ஒரு ஐ லவ் யூ வேறு சொல்லி கன்னத்தில் நச்சென்று முத்தம் கொடுத்துவிட்டார். ஆக பரபரப்பாகும் என்று நினைத்து தூண்டிவிட்ட விஷயம் சப்பென்று முடிந்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X