காலையிலேயே இப்படியா?.. ஐஸ்வர்யாவை அவரது கணவர் தூக்கி இறக்கி என்ன பண்றாரு பாருங்க!

சென்னை: ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற உமாபதியை மாப்பிள்ளையாகவே மாற்றிக் கொண்டார். ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் தம்பி ராமையாவின் மருமகளாக மாறினார். அது ஒரு பக்கம் இருக்க, அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஐஸ்வர்யா கிருஷ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணமானது குறிப்பிடத்தக்கது.

ஃபிட்னஸ் டிரெய்னரான ஐஸ்வர்யா கிருஷ் தன்னை போலவே தனது கணவரையும் மாற்றிவிட்டேன் எனக் கூறி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. Couples goal ஆக இதையெல்லாம் பண்ண வேண்டும் என இனிமேல் பல பெண்கள் தங்கள் கணவரையும் டார்ச்சர் செய்யாமல் இருந்தால் சரி என்கிற அளவுக்கு அந்த வீடியோ உள்ளது.

Aishwarya Krish husband lifts her in a morning workout video

காலையில் வெயிட் லிஃப்ட்டை தூக்குவதற்கு பதிலாக ஐஸ்வர்யாவின் கணவர் தனது மனைவியையே தூக்கி இறக்கும் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

சர்வைவர் தமிழ்: பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதற்கு போட்டியாக சன் டிவி மற்றும் ஜீ தமிழில் பல புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கினர். ஆனால், எந்த நிகழ்ச்சியும் தொடர்ந்து சூடு பிடிக்கவில்லை. சன் டிவியில் சொப்பன சுந்தரி என ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்று வெளியானது. ஆனால், அதுவும் பெரிதாக ஹிட்டடிக்காமல் அப்படியே நின்றுவிட்டது. வெளிநாடுகளில் ஹிட்டடித்த சர்வைவர் நிகழ்ச்சியை ஜீ தமிழ் அர்ஜுனை தொகுப்பாளராக மாற்றி பிரமாண்டமாக அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த நிகழ்ச்சி முதல் சீசனுடன் அப்படியே முடிந்து விட்டது.

ஐஸ்வர்யா கிருஷ்: பிரபலங்களுக்கு ஃபிட்னஸ் டிரெய்னராக இருந்து வந்த ஐஸ்வர்யா கிருஷ் திடீரென அந்த ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். இறுதி வரை வந்து வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கால் வாசி தூரத்தை கடந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இன்ஸ்டாகிராமில் பிகினி போட்டோக்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு இன்ஃப்ளூயன்ஸராக வலம் வரும் ஐஸ்வர்யா கிருஷ் படங்களில் எல்லாம் நடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சட்டு புட்டுனு திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.

கணவருடன் வீடியோ: சோஷியல் மீடியா பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் ஏதாவது ரீல்ஸ் வீடியோக்களை போட்டு தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். தனியாக பல போஸ்டுகளை போட்டு வந்த ஐஸ்வர்யா கிருஷ் தற்போது தனது கணவருடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட தொடங்கி உள்ளார். அதுவும் காலையிலேயே இருவரும் செய்யும் அலப்பறையை பார்த்த ரசிகர்கள் ஏன்மா இப்படியெல்லாம் என கேட்கத் தொடங்கி விட்டனர்.

தூக்கி இறக்கி: உடற்பயிற்சி செய்ய வெயிட் லிஃப்ட்டை தூக்குவதற்கு பதில் தனது மனைவியையே ஐஸ்வர்யாவின் கணவர் தூக்கி இறக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சிங்கிள் பசங்களை ரொம்பவே டார்ச்சர் பண்ணுகிறார். இதற்காகத்தான் என்னுடைய கணவருக்கு பயிற்சி கொடுத்தேன் என்றும் என்னுடைய எடை எவ்வளவு இருக்கும் என கெஸ் பண்ணுங்க என்றும் ஐஸ்வர்யா கிருஷ் போஸ்ட் போட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் கணவர் குறித்தும் ஐஸ்வர்யா குறித்தும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

FAQs
ஜீ தமிழில் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது யார்?

நடிகர் அர்ஜுன்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X