வசீகரா பாட்டுக்கு ஜிம்னாஸ்டிக் டான்ஸ் ஆடிய சர்வைவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.. அந்த டிரெஸ்ஸ பார்க்கணுமே!
சென்னை: சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஐஸ்வர்யா கிருஷ்ணன் வசீகரா பாட்டுக்கு ஜிம்னாஸ்டிக் டான்ஸ் ஆடியுள்ள வீடியோ வெளியாகி தீயாக பரவி வருகிறது.
Recommended Video
மாடல் அழகியும் ஃபிட்னஸ் டிரெய்னருமான ஐஸ்வர்யா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை அடுக்கி இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.
அரை நிர்வாணமாகவும் சில புகைப்படங்களை ஷேர் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

ஐஸ்வர்யா கிருஷ்ணன்
விளையாட்டில் அதிக ஆர்வமுள்ள ஃபிட்னஸ் டிரெய்னர் தான் ஐஸ்வர்யா கிருஷ்ணன். மாடலிங்கிலும் அவருக்கு அதீத ஆர்வம் உள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட மாடலிங் போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் தற்போது தனக்கான ஒரு ரசிக வட்டத்தை உருவாக்கி வருகிறார் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.

சர்வைவர் தமிழ்
ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஐஸ்வர்யா கிருஷ்ணன். யாருடா இந்த பொண்ணு இப்படி ஜிம்னாஸ்டிக் வித்தையெல்லாம் செய்றாங்களே.. ஆண் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக விளையாடுறாங்களே என ரசிகர்களால் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டார். ஆனால், ஃபைனல்ஸ் போகாமல் அதிரடியாக வெளியேற்றப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அரை நிர்வாணமாக
பிகினி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த ஐஸ்வர்யா கிருஷ்ணன் மேலாடை ஏதும் அணியாமல் அரை நிர்வாணமாகவும் சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார். சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் செம போல்டாக ஷார்ட் டிரெஸ்களை அணிந்து அசத்திய ஐஸ்வர்யா கிருஷ்ணன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

வசீகரா பாடலுக்கு
ஃபிட்னஸ் டிரைனரான ஐஸ்வர்யா கிருஷ்ணன் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் விளம்பரங்களையும் செய்து வருகிறார். இந்நிலையில், வசீகரா பாடலுக்கு அவர் ஆடியுள்ள நடன வீடியோ வைரலாகி வருகிறது.

ஜிம்னாஸ்டிக் டான்ஸ்
மின்னலே படத்தில் இடம்பெற்ற மாதவன், ரீமாசென்னின் வசீகரா பாடலுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் நடன வீடியோக்களை போட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது ஜிம்னாஸ்டிக் டான்ஸ் ஆடுவது போல உடலை ஒட்டுமொத்தமாக வளைத்து பறந்து பறந்து கேட் உமனை போல நடனமாடி உள்ளார் ஐஸ்வர்யா கிருஷ்ணன்

பேக்லெஸ்
ஒட்டுமொத்த பின்னழகும் தெரியும் விதமாக பேக்லெஸ் உடையை அணிந்து கொண்டு இந்த பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். இது நடனமா? அல்லது உடல் பயிற்சியா என புரியாமல் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஐஸ்வர்யா கிருஷ்ணனின் ஆடைக்கு எக்கச்சக்க ஃபயர் எமோஜிக்கள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











