தொடர்ந்து 3வது வாரமாக நாமினேட் ஆன ஐஸ்வர்யா: வேணாம் பிக் பாஸ், கடுப்பாகிடுவோம்

By Siva

Recommended Video

ஐஸ்வர்யாவை கூச்சமேயில்லாமல் காப்பாற்றி விடும் பிக் பாஸ்- வீடியோ

சென்னை: ஐஸ்வர்யா தொடர்ந்து 3வது வாரமாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் ஐஸ்வர்யா மட்டும் தான் நாமினேஷனுக்கு வராமல் இருந்தார். இதை பார்வையாளர்களும், சக போட்டியாளர்களும் தொடர்ந்து விமர்சித்தனர்.

அதன் பிறகு ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்படுவதும், கள்ள ஓட்டு போட்டு காப்பாற்றப்படுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

ஐஸ்வர்யா

மும்தாஜ் வெளியேற்றப்பட்ட பிறகு பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 6 பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே இந்த வாரம் நாமினேட் செய்யப்படுவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதை கேட்ட ஐஸ்வர்யா எழுந்து நின்று வணக்கம் சொன்னார். இருக்காதா பின்ன, வார வாரம் காப்பாற்றுபவரும் பிக் பாஸ் தானே.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஐஸ்வர்யாவை பார்த்து கடுப்பாகி திட்டி திட்டி பார்வையாளர்களுக்கு பழகிவிட்டது. யார் ஓட்டு போட்டாலும் அதை செல்லா ஓட்டுகளாக்கி ஐஸ்வர்யாவை காப்பாற்றுவது பிக் பாஸுக்கு பழகிவிட்டது. இந்த இரண்டு பேருமே அவரவர் பழக்கங்களை மாற்றிக் கொள்வதாக இல்லை. ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னர் ஆக்காமல் பிக் பாஸ் ஓய மாட்டார் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

யாஷிகா

யாஷிகா

தோழிகளான யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் ஃபைனல்ஸ் வரை வருவார்கள் என்பது சக போட்டியாளர்களுக்கே தெரியும். இதை அவர்களே தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு பிக் பாஸ் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். பிக் பாஸ் வீட்டில் தமிழ் பொண்ணு, இந்தி பொண்ணு என்ற பிரிவினை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடக்கவே நடக்காது

ஐஸ்வர்யா எலிமினேட் ஆவார் என்று எதிர்பார்த்து பார்த்து பார்வையாளர்கள் ஓய்ந்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X