மன்னிச்சுடுங்க ஜி: ஐஸ்வர்யாவுக்காக தாடி பாலாஜியிடம் அழுதுகிட்டே மன்னிப்பு கேட்ட அம்மா

By Siva

Recommended Video

பாலாஜியிடம் கதறி அழுத ஐஸ்வர்யா அம்மா | Bigg Boss Promo1

சென்னை: மகள் செய்த தவறுக்காக ஐஸ்வர்யாவின் அம்மா தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த வாரம் பிக் பாஸ் 2 வீட்டில் அழுகாச்சி வாரம். போட்டியாளர்களின் பெற்றோரை வீட்டிற்கு வரவழைத்து அனைவரையும் அழ விடுகிறார் பிக் பாஸ். நீங்கள் நினைப்பது சரியே, இந்த அழுகாச்சி எல்லாம் முதல் சீசனில் இருந்து காப்பியடிக்கப்பட்டதே.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் அம்மா இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

சினிமா

சினிமா

சினிமாவில் நடிக்கும் ஆசையில் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்ததாக ஐஸ்வர்யா தத்தா தெரிவித்தார். தான் தனியாக இருப்பதாக நிகழ்ச்சியின் துவக்கத்தில் தெரிவித்தார். உடனே, நாங்கள் இருக்கிறோம் என்று சக போட்டியாளர்கள் ஆதரவாக பேசினார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஐஸ்வர்யாவின் அம்மாவை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார்கள்.

மன்னிப்பு

இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் அம்மா கரடி பொம்மையுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். சர்வாதிகாரி டாஸ்கின்போது தன் மகள் குப்பையை கொட்டியதற்காக தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கிறார். அவரோ இதை போய் பெரிதாக எடுத்துக் கொண்டு, அது என் பொண்ணு மாதிரி என்று கூறி ஐஸ்வர்யாவின் அம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.

அழுகை

அழுகை

பிக் பாஸ் ஒரே ரூட்டை தான் பின்பற்றுவார் போன்று. கடந்த வாரம் ஆளாளுக்கு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த வாரம் என்னவென்றால் தினமும் அழுகிறார்கள். அதிலும் மும்தாஜ் அழுததை பார்த்தால் எல்.கே.ஜி. பையனை முதல் நாள் பள்ளியில் விடும்போது அவன் அம்மாவை பார்த்து கதறி அழுவது போன்று இருந்தது.

முடியல

முடியல

அழுகாச்சி ஸ்க்ரிப்ட்டை மாத்துங்க பிக் பாஸ். டிவியை ஆன் செய்தால் பிக் பாஸ் போட்டியாளர்கள் அழுவதை பார்க்க முடியவில்லை. இது கூட ஸ்க்ரிப்படி அழுகையாக இருக்குமோ என்ற சந்தேகம் வேறு ஏற்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் இந்த வாரம் முழுக்க அழ வைத்தே ஓட்டிவிடுவார்கள் போன்று. எமோஷனலாக காட்டி பார்வையாளர்களை கவர்வதாக நினைத்து கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X