பிக் பாஸால் அசிங்கப்பட்ட ஐஸ்வர்யாவின் அம்மா: ஏன் அந்த கதையை சொல்லல?

By Siva

சென்னை: பிக் பாஸ் ஐஸ்வர்யா சொன்ன கதையை அவங்க அம்மாவிடம் சொல்லவில்லையா?

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா தனது அம்மா தன்னை ஏ.டி.எம். எந்திரம் போன்று பயன்படுத்துவதாக கூறினார். முன்பு ஒரு முறை தனது அம்மா இறந்துவிட்டதாக டேனியிடம் தெரிவித்தார்.

தன் அம்மா ஒரு ராட்சசி என்கிற அளவுக்கு அவரை பற்றி கதை கதையாக கூறினார் ஐஸ்வர்யா.

அம்மா

அம்மா

பிக் பாஸ் மேடையில் கமல் அருகே நின்று பேசிய ஐஸ்வர்யாவின் அம்மாவுக்கு நிகழ்ச்சியில் தனது மகள் கூறிய கதை எல்லாம் தெரியாது போன்று. அதனால் தன் மகளுக்காக தான் நிறைய தியாகம் எல்லாம் செய்திருப்பதாக ஃபீலிங்குடன் கூறினார். அதை பார்த்த பார்வையாளர்களோ அய்யோ இந்த அம்மா உண்மை தெரியாமல் ரீல் விடுறாங்களே என்று சிரிப்பை அடக்கினார்கள்.

கொல்கத்தா

கொல்கத்தா

என் மகளுக்கு சிறு வயதில் இருந்தே டான்ஸ், நடிப்பு என்றால் இஷ்டம். 16 வயதில் தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கொல்கத்தாவில் இருந்து சென்னை தூரம் என்பதால் நான் வரவில்லை என்று கமலிடம் தெரிவித்தார் ஐஸ்வர்யாவின் அம்மா. என் அம்மாவுக்கு பணம் தான் முக்கியம், அவருக்கு மாதா மாதம் 10ம் தேதிக்குள் பணம் அனுப்ப வேண்டும், இல்லாவிட்டால் பேயாட்டம் ஆடுவார் என்று ஐஸ்வர்யா பாலாஜியிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருத்தம்

வருத்தம்

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஐஸ்வர்யாவின் அம்மா தன் மகள் செய்த காரியங்களுக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். அது குறித்து பேசிய கமல் 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பது போன்று ஐஸ்வர்யாவின் அம்மா மன்னிப்பு கேட்டதாக கூறினார். அப்படி என்றால் பிக் பாஸை போன்றே நீங்களும் ஐஸ்வர்யா செய்தது எல்லாம் தப்பே இல்லை என்கிறீர்களா கமல் சார்?

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஏன் பிக் பாஸ் உங்களின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா தனது அம்மாவை பற்றி கூறிய கதைகளை எல்லாம் அந்த அம்மாவிடம் சொல்லியிருக்க வேண்டாமா? பாவம் அது தெரியாமல் அந்த அம்மா தன்னை பெரிய தியாகி போன்று நினைத்து பேசினார். அவர் பேசியதை பார்த்த பார்வையாளர்களோ மகளை விட அம்மாவின் நடிப்பு அமோகமாக இருக்கே என்று சிரித்தபடி கமெண்ட் அடித்தனர். நீங்க மட்டும் கதையை சொல்லியிருந்தால் அந்தம்மாவுக்கு இந்த அசிங்கம் ஏற்பட்டிருக்காதே பிக் பாஸ்.

சென்றாயன்

சென்றாயன்

ஐஸ்வர்யா தனது அம்மாவை பற்றி தமிழில் பேசியதால் நிகழ்ச்சியை பார்த்தும் அவருக்கு புரியவில்லை போன்று. தான் இறந்துவிட்டதாக மகள் கூறியது தெரியாமல் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். உனக்கு அம்மா இல்லையாமே, இனி நான் இருக்கேன் தாயி என்று சென்றாயனின் அம்மா கூட ஐஸ்வர்யாவிடம் தெரிவித்தார். உடனே சுதாரித்த சென்டு அதெல்லாம் இருக்காங்க என்று கூறி சமாளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X