நான் நினைத்தால் 2 நிமிஷத்தில் மக்களின் ஆதரவை பெற்றுவிடுவேன்: ஐஸ்வர்யா
Recommended Video

சென்னை: நான் நினைத்தால் வெறும் 2 நிமிடத்தில் மக்களின் ஆதரவை பெறுவேன் என்று ஐஸ்வர்யா நிலைமை புரியாமல் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யாவை ஏன் வெளியேற்றாமல் உள்ளீர்கள் என்று பார்வையாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள். பிக் பாஸ் தான் ஐஸ்வர்யாவை வேண்டும் என்றே காப்பாற்றி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஐஸ்வர்யாவை பார்த்தாலே பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. இது தெரியாமல் அந்த பொண்ணு ஏதேதா பேசிக் கொண்டிருக்கிறார்.

ஓட்டு
மக்களின் ஆதரவு, ஓட்டுகளை வாங்குவது எப்படி என்று எனக்கு நன்றாக தெரியும். நான் இரண்டு நிமிடத்தில் மக்களின் ஆதரவை பெற்றுவிடுவேன் என்று ஐஸ்வர்யா யாஷிகாவிடம் தெரிவித்துள்ளார். அம்மா ஐஸ்வர்யா உங்களை எப்போ வெளியே அனுப்புவார்கள் என்று தான் பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு எல்லாம் கிடைக்காது.

கோள்மூட்டி
மகத்திடம் நான் நிறைய கேள்விகள் கேட்கப் போகிறேன். ஆனால் நேரம் தான் இல்லை என்று ஐஸ்வர்யா யாஷிகாவிடம் பாசமாக பேசினார். ஆனால் அதன் பிறகு மகத்தை பார்த்ததும் ஒரு மண்ணாங்கட்டி கேள்வியும் கேட்கவில்லை. முன்னதாக யாஷிகாவால் கடுப்பாகி மகத் தனியாக நின்றபோது உன் பெயரை காப்பாத்த தான் அப்படி சொன்னேன் என யாஷிகா மற்றவர்களிடம் கூறினார் என்று போட்டுக் கொடுத்தவரே இந்த ஐஸ்வர்யா தான்.

ஐஸ்வர்யா
மகத்தை காதலிப்பதாக கமலிடம் சொன்ன யாஷிகா அவருக்கு காதலன் இருப்பதை ஏன் சொல்லவில்லை என்று முதல் ஆளாக கேள்வி கேட்டவர் ஐஸ்வர்யா. மகத்திடம் தனியாக மற்றும் ஜனனி, மும்தாஜ் உள்ளிட்டோரிடமும் யாஷிகா தனக்கு காதலர் இருப்பதை சொல்லாமல் மறைத்துவிட்டார் என்று பிட்டை போட்டதே ஐஸ்வர்யா தான். ஆனால் தற்போது யாஷிகா முன்பு நல்லவர் போன்று சீன் போடுகிறார்.

மகத்
நீ கொஞ்ச நாள் யாஷிகாவுடன் இரு. வெளியில இருக்கிற பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் இதை பெரிதாக்க கூறவில்லை. ஆனால் அவளுடன் இரு. வெளியில் உள்ள பிரச்சனையை நான் சமாளிக்கிறேன் என வாக்குறுதி அளிக்கிறேன் என்று மகத்திடம் தெரிவித்தார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா இப்படி மாத்தி மாத்தி பேசிக் கொண்டு மக்களின் ஆதரவு தனக்கு தான் நினைப்பது காமெடியாக உள்ளது.

யாஷிகா
எனக்கு அவன் வேண்டும் என்று இல்லை. ஒரு சமயத்தில் தேவைப்பட்டது ஆனால் தற்போது தேவை இல்லை என்று யாஷிகா ஐஸ்வர்யாவிடம் கூறினார். ஐஸ்வர்யாவோ உன்னை காயப்படுத்தியது மும்தாஜின் வார்த்தைகள் என்று போட்டுக் கொடுத்தார். வைஷ்ணவி அல்ல மாறாக ஐஸ்வர்யா தான் கோள்மூட்டி வேலையை பக்காவாக பார்த்துக் கொண்டிருக்கிறார். ஐஸும்மா, உனக்கு சத்தியமா ஓட்டு கிடைக்காதுமா.


Click it and Unblock the Notifications











