twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடேங்கப்பா, ஐஸ்வர்யாவின் ஆசை ரொம்ப பெருசா இருக்கே: இது சத்தியமா பிக் பாஸால் முடியாது

    By Siva
    |

    சென்னை: ஐஸ்வர்யாவுக்கு மிகப் பெரிய ஆசை இருப்பது தெரிய வந்துள்ளது.

    பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்ப்பவர்களில் பலரும் கழுவிக் கழுவி ஊத்தியது ஐஸ்வர்யாவை தான். பிக் பாஸோ விதிமுறைகளை மீறி ஐஸ்வர்யாவை பல முறை காப்பாற்றியதால் பார்வையாளர்களுக்கு அவரை பிடிக்காமல் போய்விட்டது.

    எப்பொழுது பார்த்தாலும் கோபப்பட்டு கத்தி அட்டகாசம் செய்து கெட்டப் பெயர் எடுத்தார் ஐஸ்வர்யா.

    கமல்

    கமல்

    உங்களுக்கு சூப்பர் பவர் கொடுத்தால் அது எதுவாக இருக்க வேண்டும் என்று கமல் ஹாஸன் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோரிடம் கேட்டார். அதற்கு ஐஸ்வர்யாவோ தனக்கு அலாவுத்தீனின் அற்புத விளக்கு வேண்டும் என்றார். எது வேண்டுமானாலும் அந்த விளக்கிடம் கேட்பேன் என்றார். அடேங்கப்பா, பெரிய திட்டமாகத் தான் இருக்கு. தப்பில்ல ஐஸ்வர்யா.

    பெண்

    பெண்

    உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் நீங்கள் ஆணாக மாறுவீர்களா? ஆம் என்றால் ஏன், இல்லை என்றால் ஏன் என்று கமல் கேட்டார். அதற்கு ஐஸ்வர்யா ஆணாக மாற விரும்புவதாக தெரிவித்தார். ஆணாக மாறினால் பல விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும் என்றார். பெண்ணாக இருப்பதால் தற்போது முடியவில்லை என்றார். ஆணாக மாறினால் தன்னை அமைதியாக வைத்துக் கொண்டு, கன்ட்ரோல் பண்ண முடியும் என்று நினைக்கிறார் ஐஸ்வர்யா.

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா அளித்த பதிலை பார்த்த பார்வையாளர்களோ பெண் என்றால் பொறுமை என்பர். அப்பேர்பட்ட பெண்ணாக இருந்து கொண்டே உங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. இதில் ஆணாக மாற ஆசைப்படுகிறீர்களா என்று கேட்டுள்ளனர். ஐஸ்வர்யா ஆணாக மாற ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால் அதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் சரியில்லை.

    ஜனனி

    ஜனனி

    ஆணாக மாறி ஒரு பெண்ணை முழுமையாக ஆராதிப்பேன் என்றார் விஜி. ஜனனி பெண்ணாகவே இருக்க விரும்புவதாக கூறினார். பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை என்றார். ரித்விகாவும் பெண்ணாகவே இருக்க விரும்புவதாக கூறினார். தாய்மை என்பது பெண்களிடம் மட்டுமே உள்ளதால் பெண்ணாக இருக்க விரும்புவதாக கூறினார் ரித்விகா.

    English summary
    Bigg Boss 2 Tamil contestant Aishwarya would love to have Aladdin's magic lamp.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X