ஓவியா மாதிரியே அடம் பிடிக்கும் ஐஸ்வர்யா: சின்னப்புள்ளத்தனமா நடக்கும் பிக் பாஸ்
Recommended Video

சென்னை: ஐஸ்வர்யா தத்தா ஓவியா எடுத்த அதே முடிவை எடுத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் மும்தாஜ்-மமதி ஒரு பக்கம் என்றால், யாஷிகா-ஐஸ்வர்யா தத்தா மறுபக்கம் நெருங்கிய தோழிகளாக உள்ளனர். அவர்களும் மகத்தும் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு குறைவே இல்லை.
அவ்வப்போது ஷாரிக்கும் இந்த லூட்டி பார்ட்டியுடன் சேர்ந்து கொள்வார்.
ஐஸ்வர்யா
யாஷிகா, ஐஸ்வர்யா இடையே பிரச்சனை ஏற்படுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அனைவரும் என்னை நாமினேட் செய்யுங்கள், நான் இந்த நிகழ்ச்சியை விட்டு போக விரும்புகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா.(ஆரவ் தனது காதலை ஏற்காதபோது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தார் ஓவியா என்பது குறிப்பிடத்தக்கது.)
போட்டி
கன்ஃபெஷன் அறைக்குள் முதலில் வரும் 2 பேர் தலைவர் போட்டியில் பங்கேற்க தகுதியானவர்கள் என்று பிக் பாஸ் அறிவித்த ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்
வைஷ்ணவியும், சென்றாயனும் அடித்துப்பிடித்து கன்ஃபெஷன் அறைக்குள் சென்று தலைவர் பதவிக்கான போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்கள். யார் அதிகமாக ஹக்ஸ் பெறுகிறாரோ அவரே தலைவராக இருப்பார் என்கிறார் பிக் பாஸ்.

சிறுபிள்ளைத்தனம்
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவரை பிக் பாஸே தேர்வு செய்தார். இந்த வாரமோ சின்னப்புள்ளத்தனமாக யாருக்கு அதிகம் ஹக்ஸ் கிடைக்கிறதோ அவரே தலைவர் என்கிறார் பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











