For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    தீபாவளி தினத்தில் மோதிக்கொள்ளும் ‘தல’, ‘தளபதி’

    By Mayura Akilan
    |

    தீபாவளி தினத்தில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது அந்தக்காலம். இப்போது எந்த சேனலில் என்ன புதுப்படம் போடுகிறார்கள் என்றுதான் பெரும்பாலோனோர் எதிர்பார்க்கின்றனர். இந்த வருட தீபாவளிக்கு சன் டிவியில் சிறப்புத்திரைப்படமாக 'தல' அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதேநேரத்தில் விஜய் டிவியில் தளபதி விஜய் நடித்த நண்பன் படம் ஒளிபரப்பாகிறது. ஒரே நேரத்தில் தொலைக்காட்சிகளில் 'தல'யும், 'தளபதி'யும் நடித்த புதுப்படங்கள் ஒளிபரப்பாவதால் ரசிகர்களுக்கு இந்த வருடம் அதிரடி தீபாவளியாக அமைந்துள்ளது.

    இந்தியத் தொலைக்காட்சிகளில்…

    இந்தியத் தொலைக்காட்சிகளில்…

    இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு சூப்பர் ஹிட் அதிரடித் திரைப்படம் மங்காத்தா ஒளிபரப்பாகிறது என்ற அறிவிப்பு களை கட்டத் தொடங்கிவிட்டது. அதற்கான முன்னோட்டம் இன்றிலிருந்தே சன் டிவியில் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பாகிறது.

    அஜீத் ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளி

    அஜீத் ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளி

    தீபாவளி தினத்தன்று அஜித் நடித்த திரைப்படம் வெளியாகவில்லை என்று கவலைப்பட்ட ரசிகர்கள் சன் டிவியில் மங்காத்தாவைப் பார்த்து ‘தல' தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடலாம்.

    விஜய் டிவியில் வேட்டை

    விஜய் டிவியில் வேட்டை

    விஜய் டிவியில் காலை 11 மணிக்கு மாதவன், ஆர்யா, அமலாபால், சமீரா ரெட்டி நடித்த ‘வேட்டை' புத்தம் புதிய திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

    6 மணிக்கு விஜயின் ‘நண்பன்

    6 மணிக்கு விஜயின் ‘நண்பன்

    விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் திரைப்படம் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒரே நேரத்தில் தீபாவளி தினத்தன்று அஜீத், விஜய் மோதிக்கொள்கின்றனர். இதன் மூலம் ரசிகர்கள் தல - தளபதி தீபாவளியை கொண்டாடலாம்.

    என் தங்க மகன்: ஷோபா சந்திரசேகர்

    என் தங்க மகன்: ஷோபா சந்திரசேகர்

    இதைத் தவிர விஜய் டிவியில் துப்பாக்கி படத்தின் சிறப்பு கண்ணோட்டோம், கும்கி குழுவினருடன் விக்ரம் பிரபு கொண்டாடும் தீபாவளி, ‘என் தங்க மகன்' விஜய் பற்றி சோபா சந்திரசேகர் பகிர்ந்து கொள்ளும் பேட்டி, ஆர்யா ஸ்பெசல் என விஜய் டிவியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்புகின்றனர். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

    English summary
    Ajith’s Mangatha film telecast on Diwali Special on Sun TV On 6.P.M. At the same time Vijay TV telecast actor Vijay’s Nanban film.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more