பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய முக்கிய கேரக்டர்... சோகத்தில் ரசிகர்கள்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. டிஆர்பி.,யில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல்களில் இது தான் முதலிடம் பிடித்துள்ளது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா சீரியல்.

கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான் பாரதி. பல விதங்களில் சதி வேலை செய்து அவர்களை பிரிக்கிறாள் வெண்பா. கண்ணம்மாவிற்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் கருப்பாக இருக்கும் ஹேமாவை எடுத்துச் செல்கிறார் மாமியார் செளந்தர்யா. தனது மகள் என தெரியாமலேயே ஹேமா மீது பாசத்தை பொழிகிறான் பாரதி.

ஒரே பள்ளியில் படிக்கும் கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமியும், பாரதியிடம் வளரும் ஹேமாவும் நண்பர்களாகிறார்கள். கண்ணம்மாவின் மகள் என தெரியாமல் லட்சுமியின் படிப்பு செலவை ஏற்கிறான் பாரதி. கண்ணம்மாவும் ஹேமா மீது உயிராக இருக்கிறாள். இந்நிலையில் பள்ளியில் வயிற்று வலியில் துடிக்கும் லட்சுமியை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் பாரதி, அவள் கண்ணம்மாவின் குழந்தை தான் என்பதை தெரிந்து கொள்கிறான்.

பிடிவாதம் காட்டும் பாரதி

பிடிவாதம் காட்டும் பாரதி

அதனை உறுதி செய்வதற்காக லட்சுமியை தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று, கண்ணம்மாவையும் வீட்டிற்கு வரவழைக்கிறான். லட்சுமியின் அம்மா, அப்பா யார் என எனக்கு தெரிய வேண்டும் என பிடிவாதமாக கூறுகிறான் பாரதி. இப்படி சஸ்பென்ஸ், சுவாரஸ்யமாக முடிகிறது நேற்றைய எபிசோட்.

எப்போ ஒன்னு சேருவாங்க

எப்போ ஒன்னு சேருவாங்க

நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் பாரதி, கண்ணம்மா இடையே மீண்டும் காதல் காட்சிகள் காட்டப்பட்டதால், பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் எப்போது இணைவார்கள், எப்போது குழந்தைகள் பற்றிய உண்மை தெரியும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மக்கள் எதிர்பார்த்தது போலவே லட்சுமி யார் என்ற உண்மை பாரதிக்கு தெரிய வருகிறது.

சீரியலிலிருந்து விலகிய அகிலன்

சீரியலிலிருந்து விலகிய அகிலன்

இதற்கிடையில் இந்த சீரியலில் அஞ்சலியின் கணவராக நடிக்கும் அகிலன், சீரியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அஞ்சலி கேரக்டரில் நடிக்கும் கண்மணி மனோகரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தற்போது சீரியல் தயாரிப்பு நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

இனி இவர் தான் அகிலனா

இனி இவர் தான் அகிலனா

அகிலன் தற்போது ஐதராபாத்தில் விஷால் நடிக்கும் படத்தின் ஷுட்டிங்கில் பங்கேற்று வருகிறார். படத்தில் பிஸியாக இருப்பதால் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அகிலன் விலகி உள்ளார். அவருக்கு பதில் சுகேஷ், அகிலன் கேரக்டரில் இனி நடிக்க போகிறாராம். இவர் திருமதி ஹிட்லர் சீரியலில் நடித்துள்ளார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தபடியாக அஞ்சலியின் வளைகாப்பு நடக்க உள்ளது. இதன் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் அகிலனாக சுகேஷ் இணைந்திருப்பது போன்ற ஃபோட்டோ வெளியாகி உள்ளது.

வேதனை தெரிவிக்கும் ரசிகர்கள்

வேதனை தெரிவிக்கும் ரசிகர்கள்

இதனை பார்த்து விட்டு ரசிகர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர். எதற்காக அகிலனை மாற்றினீர்கள், இவர் அகிலன் கேரக்டருக்கு பொருந்தவில்லை, வேறு யாரையாவது மாற்றி இருக்கலாம், பழைய அகிலனையே நடிக்க வையுங்கள் என்பது போன்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X