அக்னி நட்சத்திரத்தை விட டிரைவர் பொண்டாட்டி மேல ஜெயந்தி சூடா இருக்காங்களே....!
சென்னை: சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலில் அக்னி நட்சத்திரத்தை விட அகிலாவின் அம்மா ஜெயந்தி ரொம்ப சூடா இருக்காங்க.
அகிலாவின் அப்பா பெரிய தொழிலதிபர்.இவரிடம் டிரைவராக வேலை பார்ப்பவர் மீராவின் அப்பா. அகிலா அப்பாவின் நெருங்கிய நண்பர்தான் மீராவின் அப்பா என்றாலும், அகிலாவுக்கு மீராவின் குடும்பத்தை சரி சமமா நடத்தறது பிடிக்கலை.
அகிலாவின் அம்மா ஜெயந்திக்கும் டிரைவர் குடும்பத்தை பிடிக்கலை. எந்த விதத்திலாவது அந்த குடும்பத்தை பழி வாங்கணும்னு நினைக்கறாங்க அகிலாவும், அவள் அம்மா ஜெயந்தியும்.

நடிக்கறாங்க அடி பட்டதாக
ஜெயந்தி தனது காலில் அடிபட்டு விட்டதாகவும், கொஞ்ச நாளைக்கு .நடக்க முடியாது.. வீல் சேரில்தான் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டதாவும் நடிக்கறாங்க. வீட்டு வேலைக்காரி லீவுலே போயிட்டதா தன் கணவரிடம் பொய் சொல்றாங்க. இதனால டிரைவரின் மனைவி அதாவது மீராவின் அம்மா ஜெயந்தி வீட்டுக்கு வேலை செய்ய வர்றாங்க.

கல்லூரியில் அகிலா
ஒரே கல்லூரியில் மீராவும், அகிலாவும் படிக்கறாங்க. அதுவும் தன்மான பிரச்சனையா இருக்கு. அகிலாவுக்கு. ஒரு வேலைக்காரனின் மகள் தான் படிக்கும் கல்லூரியில் படிப்பதா, அதுவும் தன்னைவிட நல்லா படிப்பதான்னு. இந்த செமஸ்டரில் முதல் மார்க் வாங்கிட்டா மீராவை வேற கல்லூரியில் சேர்த்துடணும்னு அப்பாவுக்கு கட்டளை போடறா அகிலா.

ரெக்கார்டு நோட்
மீராவுக்கு கெடுதல் செய்ய, அவள் அருமையாக எழுதி வைத்திருந்த ரெக்கார்டு நோட்டை மாத்தி வச்சுடறா.நோட்டில் ஒண்ணுமே எழுதாதது கண்டு மேடமும் திட்ட, ஒரு மணி நேரம் டைம் கேட்டு, ரெக்கார்டு எழுதிக் கொடுத்து நல்ல பேரும் வாங்கிடறா. இப்படி மகள் ஒரு பக்கம் மீராவை டிஸ்டர்ப் பண்ண,அம்மா ஜெயந்தி மீராவின் அம்மாவை வேலை வாங்கி உசிரை எடுக்கறாங்க.

அகிலாவின் பெட்டில்
அக்னி நட்சத்திரத்தை விட அனல் பறக்க மீராவின் அம்மாவை வேலை வாங்கி துன்புறுத்தறாங்க... உடம்பு முடியாமல் அகிலாவின் ரூமை சுத்தம் செய்யப்போன மீராவின் அம்மா அகிலாவின் பெட்டில் மயக்கம் போட்டு படுத்துடறாங்க....
என்ன சொல்றா அகிலா பொறுத்திருந்து பார்க்கலாம்...


Click it and Unblock the Notifications











