தங்கைக்கு மாங்கல்யம் தந்துனானே.. பரபர கல்யாண வீடு.. ஆனா கோபி இன்னும் வர்லையேய்யா!

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் ரொம்ப பரபரப்பா போயிகிட்டு இருக்கு. தங்கை கல்யாணத்துக்கு இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கற நிலையில் இன்னும் கோபி வந்து சேரலை.

கல்யாணத்துக்கு கோபியுடன் பாட்டு பாடும் ஸ்வேதா தன் அண்ணனோட வந்திருக்கா. அப்போ கோபியின் மேல் ஆசை வச்சிருக்கும் நடிகர் சுந்தர்ராஜனின் பொண்ணு சூரியாவிடமும், கோபியின் தங்கச்சிங்களிடமும் கோபி எனக்கு வேணாம்.. நீயே கல்யாணம் பண்ணிக்கோன்னு பேசிகிட்டு இருக்கா.

All are waiting for Gopi for his sisters marriage

இதை கேட்ட ஸ்வேதாவின் அண்ணன் தங்கச்சியின் கையை பிடிச்சுக்கிட்டு, கோபிக்கும் உனக்கும்தான் கல்யாணம் நடக்கும்.நான் இங்க உன்னை அழைச்சுக்கிட்டு வந்ததே அதுக்குதான்.

கோபி சத்தியம் செய்து குடுத்து இருக்கான். சிங்கப்பூர்ல ஒரு சத்தியம்.. பாண்டிச்சேரியில் ஒரு சத்தியம்..ரெண்டு சத்தியம் பண்ணி இருக்கான். பெரிய தியாகி மாதிரி பேசறேன்னு அத்தனை பேர் முன்னாலயும் கத்தறான்.

சூர்யாவின் அப்பா சுந்தர்ராஜன் பேச வர அவரையும் உதாசீனப் படுத்தறான் ஸ்வேதாவின் அண்ணன். ஒரு வழியா சுந்தர்ராஜன் பேச ஆரம்பிக்கறார்.

கோபி சத்தியம் செய்து குடுத்தான்..அது செல்லுமா செல்லாதான்னு நாம எப்படி முடிவு பண்ண முடியும். முதலில் சத்தியம் செய்தவன் இங்க இல்லை. சத்தியம் செய்தான்னு நீங்க சொல்றதை நாங்க நம்புறோமா இல்லையான்றது இப்போ விஷயமில்லை. சத்தியம் செய்தவன் வரட்டும்.

கோபி செய்த சத்தியம் செல்லுமா செல்லாதான்னு அவன் வந்து பேசறதுதான் முறை..இப்போ கத்துவதை நிறுத்திட்டு வந்த வேலையை பாருன்னு சொல்றார்.

அப்போ ரெண்டாவது சம்பந்தியம்மா வந்து எல்லாரையும் சாப்பிட கூப்பிடறாங்க.. இப்படி கோபி[ இல்லாமலே அவனைப் பற்றிய பெரும் பரபரப்புல கல்யாண வீடு சீரியல் போயிகிட்டு இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X