Bigg Boss Tamil 7 Archana: யாரு இந்த அர்ச்சனா?.. ராஜா ராணி சீரியல் முதல் டிமான்டி காலனி 2 வரை!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கு முன் எந்தவொரு பிக் பாஸ் சீசனிலும் இல்லாத வகையில் வைல்டு கார்டாக உள்ளே நுழைந்த அர்ச்சனா ஓவியா போலவே போல்டாகவும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டாகவும் இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஒட்டுமொத்த பிக் பாஸ் டீமே பிரதீப் ஆண்டனியை வெளியேற்றத் துடித்துக் கொண்டிருந்த நிலையில், அவரால் எனக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. நான் சேஃபா தான் ஃபீல் பண்றேன் என அர்ச்சனா போல்டாக சொன்ன நிலையில், ஜோவிகா, நிக்சன், மாயா, பூர்ணிமா என பலருடன் சண்டை போட்டார் அர்ச்சனா. வைல்டு கார்டாக உள்ளே நுழைந்தால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக கூடாதா என தனது அதிரடி ஆட்டத்தால் கடைசி வரை வீட்டில் இருந்த அர்ச்சனா இந்த சீசன் டைட்டில் வின்னராக தேர்வாகி உள்ளதாக கூறப்படுகிறது.

All details about Bigg Boss Tamil 7 Title Winner Archana Ravichandran

யாரு இந்த அர்ச்சனா: 1997ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி சென்னையில் பிறந்த அர்ச்சனாவுக்கு 26 வயதாகிறது. சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக வேலை செய்து பிரபலமானவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். ஆல்யா மானசா நடித்த ராஜா ராணி சீசன் 2வில் அர்ச்சனா எனும் கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் மிரட்டி விஜய் டிவி சீரியலில் அறிமுகமானவர் தான் இந்த அர்ச்சனா. இவரும் ஒரு விஜய் டிவி புராடக்ட் தான். இந்த சீசனில் விஜய் டிவியை சேர்ந்த பல சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், டைட்டிலில் இவர் தட்டிச் சென்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

All details about Bigg Boss Tamil 7 Title Winner Archana Ravichandran

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 கடந்த அக்டோபர் 2ம் தேதி தொடங்கியது. சுமார் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அர்ச்சனா பங்கேற்கவில்லை. அதன் பின்னர் நிகழ்ச்சி ஒரு மாதத்தை நெருங்கும் போது தான் 28வது நாளில் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார் அர்ச்சனா.

பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு: பிக் பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா நுழைவதற்கு முன்னர் வரை அந்த நிகழ்ச்சி பிரதீப் ஆண்டனி ஷோவாகவே ஓடிக் கொண்டிருந்தது. அவர் போடும் சண்டைகள், அவர் பேசும் பேச்சுக்கள், அந்த சிரிப்பு என அனைத்து புரோமோக்களிலும் பிரதீப் ஆண்டனி தான் நிறைந்து இருந்தார். இவரை இப்படியே விட்டால் இந்த சீசனில் வேற யாருக்கும் டைட்டில் கிடைக்காது என நினைத்தார்களோ என்னவோ மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு, ரவீணா, நிக்சன் உள்ளிட்ட பலரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு பெண்களுக்கு பிரதீப் ஆண்டனியால் பாதிப்பு என்கிற செங்கொடியை உயர்த்தி ரெட் கார்டு கொடுக்க வைத்தனர். ஆனால், பிரதீப் ஆண்டனிக்கு எதிராக ரெட் கார்டு உயர்த்தாமல் அவரால் எந்த பிரச்சனையும் இல்லை என பேசிய அர்ச்சனாவுக்கு பிரதீப் வெளியே சென்றதும் பிரதீப் ரசிகர்கள் ஆதரவு கரம் நீட்ட ஆரம்பித்து விட்டனர்.

டைட்டில் வின்னர்: 28ம் நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த அர்ச்சனா 105 நாட்கள் பிக் பாஸ் விளையாட்டில் தனது திறமையான விளையாட்டு மற்றும் தொடர்ந்து ஒரு கூட்டமே தன்னை எதிர்த்தாலும் யாருக்கும் அஞ்சாமல் விளையாடி வந்த நிலையில், மக்களின் செல்வாக்கை பெற்றார். வைல்டு கார்டு என்ட்ரி எப்படி டைட்டில் வின்னர் ஆவார் என்கிற கேள்வி கடைசி வரை இருந்துக் கொண்டே இருந்து வந்த நிலையில், இவரை தவர இந்த சீசனில் டைட்டில் வின்னருக்குத் தகுதியான போட்டியாளர் இல்லை என மக்கள் நினைத்தனர். அதன் விளைவாக அனைத்து ஆன்லைன் போல்களிலும் அர்ச்சனாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், அர்ச்சனா முதலிடத்தில் சேவ் ஆகி வந்தார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அர்ச்சனா மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை 6 மணி முதல் ஆரம்பிக்கப்படும் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் அர்ச்சனா கோப்பையை வெல்லும் காட்சிகள் இடம்பெற உள்ளன.

டிமான்டி காலனி: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு அர்ச்சனா வருவதற்கு முன்பே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் அர்ச்சனா பெற்றார். அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள டிமான்டி காலனி 2 டிரெய்லரில் அர்ச்சனாவை காட்டியதுமே பிக் பாஸ் ரசிகர்கள் ஹேப்பியாகி விட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் இவருக்கும் பல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X