'அந்த ஒரு வார்த்தை'யால் சென்றாயன், மும்தாஜ் இடையே மோதல்
சென்னை: மும்தாஜுக்கு தற்போது எல்லாம் எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது.
பிக் பாஸ் 2 வீட்டில் மகத் இருந்து அத்தனை அட்டகாசம் செய்தபோது மும்தாஜ் பொறுமையின் சிகரம் போன்று இருந்தார். அமைதியாக இருந்து சிரித்து சிரித்து பார்வையாளர்களிடம் நல்ல பெயர் எடுத்தார்.
தற்போது அந்த பெயரை எல்லாம் கெடுத்துக் கொள்வது போன்று கோபப்படுகிறார்.
மும்தாஜ்
சென்றாயனுக்கு சமைக்க வராது, அவருக்கு புரிதல் சக்தி இல்லை என்று மும்தாஜ் கமலிடமே தெரிவித்தார். இதையடுத்து வேண்டும் என்றே கமல் சென்றாயனை மும்தாஜுடன் சமைல் அணியில் சேர்க்குமாறு கூறினார். இந்நிலையில் அதை சென்றாயன் கூறியது தவறு என்று அவருடன் மல்லுக்கட்டுகிறார் மும்தாஜ். என்னாச்சு மோமோ?
போலி
பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் மும்தாஜ் பற்றி விமர்சனம் செய்கிறார்கள். இத்தனை நாள் அன்பு அன்பு என்றதெல்லாம் போலியா என்கிறார் தாடி பாலாஜி. இதை எல்லாம் கேட்டு மும்தாஜ் கடுப்பாகும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வர வர ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு மும்தாஜுக்கு கோபம் வருகிறது.

எது நடிப்பு?
மகத் அவ்வளவு மோசமாக நடந்து கொண்டபோதும், பேசிய போதும் மும்தாஜுக்கு கோபமே வரவில்லை. அவர் கோபப்படாததை பார்த்து பார்த்தே மகத்துக்கு வெறி ஏறியது. ஆனால் தற்போது சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்படுகிறார் மும்தாஜ். அப்படி என்றால் மகத் இருந்தபோது கோபமே வராத மாதிரி நடித்தாரா, இல்லை தற்போது நடிக்கிறாரா?

பிடிக்கவில்லை
மும்தாஜுக்கு ஐஸ்வர்யா, யாஷிகாவை தான் பிடிக்கும். தமிழ் பெண்களான ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமியை பிடிக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ரித்விகாவை காப்பாற்ற தனது தலைமுடியை கலர் செய்ய மறுத்துள்ளார் மும்தாஜ். இது மும்தாஜாக செய்வதா, இல்லை பிக் பாஸ் சொல்லிக் கொடுத்து செய்வதா என்ற சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











