Nayagi serial: என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு சொல்ல முடியலையே!

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் ஒரு பொண்ணுக்கு நடக்க கூடாத கொடுமை எல்லாம் நடக்குது.

என் புருஷன்தான்னு நிரூபிக்க எத்தனை போராட்டம். மத்தவங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால்,கட்டின புருஷன்கிட்ட நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

வயித்துல புருஷனோட குழந்தையை சுமப்பதை கூட சொல்லி சந்தோஷப்பட முடியலை. மொத்தத்தில் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கத் தயாராக இருக்கும் புருஷனை என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்னு சொந்தம் கொண்டாட முடியலை.

திருமுருகன் ஆனந்தி

திருமுருகன் ஆனந்தி

ஆனந்தி திருமுருகன் இரண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டாங்க. கல்யாணத்தை கெடுக்க திருமுருகன் அப்பா கலிவரதன் என்னென்னெவோ செய்தும் கல்யாணம் நடந்துருச்சு. அதே மாதிரி முதலிரவு நடக்க கூடாதுன்னு சதி செய்தும் முதலிரவு நடந்துருது. காரணம் இவங்க ரெண்டு பேருக்கும் பிறக்கப் போற குழந்தையால் கலிவரதன் உயிருக்கு ஆபத்தாம்.

அடிபட்டு நினைவுகள்

அடிபட்டு நினைவுகள்

திருமுருகனுக்கு மண்டையில் அடிபட்டு,கடந்த ஐந்து வருட கால நினைவுகள் அழிஞ்சு போயிருது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகிட்ட கலிவரதன் துரை அரசன் பொண்ணு அனன்யாவை மீண்டும் திருவுக்கு கல்யாணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்குது. அவனுக்கு நினைவு வர வேண்டிய மாத்திரை,சித்த மருந்து குளிகைன்னு எதை எதையோ மாத்தி வச்சு ஆனந்தியைப் போராட வைக்கறாங்க.

சதிகளை முறியடிச்சு

சதிகளை முறியடிச்சு

எல்லாவற்றையும் முறியடிச்சு ஆனந்தி திருவை மாத்திரை குளிகைகளை சாப்பிட வச்சுடறா. அவனுக்கும் நினைவு வந்து இந்த கல்யாணம் நின்னுரும்னு காத்திருக்காங்க. இன்னும் அவனுக்கு நினைவு திரும்பிய பாடில்லை. கடைசியில் அனன்யாவுக்கும், திருவுக்கும் கல்யாணம் நாளைக்கு நடக்கப்போகுது. திருவை வச்சுக்கிட்டே, உன் கழுத்தில் தாலி தொங்குதே அதுக்கு உரிமையானவன் யாருன்னு கேட்கறா. உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு யாரு அப்பான்னு கேட்கறா.

என் புருஷன்தான்

என் புருஷன்தான்

திருதான் என் புருஷன்... என் வயித்துல வளர்ற குழந்தைக்கு நீங்கதான் திரு அப்பான்னு சொல்ல முடியுமா தவிக்கறா ஆனந்தி. சொன்னால் அவன் உயிருக்கு ஆபத்தா முடியுமாம்.. என்னங்க மாத்திரை சாப்பிட்டும் ஆறு மாசம் முடிஞ்சு போச்சு..குளிகையும் சாப்டாச்சு .மூளை பலமடைஞ்சு இருக்காது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X