முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...!
சென்னை: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய அடுத்த படத்துக்கு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை தமிழுக்கு களம் இறக்கப் போறாராம்.
நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் தர்பார் மும்பையில் ஏகப்பட்ட கஷ்டங்களை இழுத்து விட்டு இருக்கிறதாம்.
சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிக்கும் முருகதாஸ் அடுத்தகட்ட முடிவை ரொம்ப ஸ்ட்ராங்கா எடுத்திருக்காராம்.

பெரிய தலைங்க
தமிழகத்தின் பெரும் நடிகர்கள் எல்லாம் வளரும் இளம் இயக்குநர்களின் படங்களில் நடிப்பதை விரும்புகிறார்கள்.காரணம் அவங்க ரொம்ப ஃபிரஷா கதை சொல்றாங்களாம். இது நடிகர் விஜயகாந்த் பாணி.ஊமை விழிகளில் ஆரம்பிச்சு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டின் பல இயக்குநர்களை உருவாக்கியவர் அவர்.

அஜீத், விஜய்
ரஜினி, அஜீத்,விஜய்னு எல்லாருமே இப்படி களம் இறங்கிட, முருகதாஸ் வேறுவிதமா யோசிச்சு இருக்கார். தெலுங்கில் மிகப் பிரபலமாக இருக்கும் எல்லாருக்கும் பிடித்த இளம் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படத்தை இயக்கத் திட்டமிட்டு இருக்காராம்.

என் வீடு இந்தியா
கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் மாபெரும் ஹிட் கொடுத்த படம் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா. இதுக்குப்பிறகு இவருக்கு மார்க்கெட் கூடி போனது.சம்பளமும் ஏகத்துக்கும் எகிறியது. இப்போது தெலுங்கில் நிறைய படங்கள் இவர் கை வசம்.

தெலுங்கு தமிழ்
முருகதாஸ் அல்லு அர்ஜுன் இருவரும் இணையும் படம் தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிப் பதிப்பாக இருக்கும் என்றும் தெரிகிறது. கால்ஷீட்டுக்காக இப்போதே சொல்லி வைத்திருக்காராம் முருகதாஸ்.


Click it and Unblock the Notifications











