அடுத்தக் கட்டத்திற்கு தயாராகும் ஆல்யா மானசா.. வெறித்தனமான பிராக்டீஸ்!

சென்னை : பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா, ராஜா ராணி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர். ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.

இந்தத் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தொடரின் ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுப்பதற்காக தன்னை தயார் படுத்தி வருகிறார் ஆல்யா.

ஆல்யா மானசா -சஞ்சீவ் ஜோடி

சின்னத்திரையில் பிரபலமான ஜோடி என்றால் அது ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தான். விஜய் டிவியின் முன்னணி தொடராக இருந்த ராஜா ராணி தொடரில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தபோது காதல் தீ பற்றிக் கொண்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகினர்.

ராஜா ராணி தொடர்

ராஜா ராணி தொடர்

தொடர்ந்து தன்னுடைய முதல் குழந்தை பிறப்பை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார் ஆல்யா மானசா. இதனிடையே இரண்டாவது குழந்தைக்கான கர்ப்பம் தரித்த நிலையில், தொடரிலிருந்து விலகினார். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சந்தோஷத்தை சஞ்சீவ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

ரீ என்ட்ரிக்கு தயார்

ரீ என்ட்ரிக்கு தயார்

தற்போது தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் ரீஎன்ட்ரிக்கு தயாராகியுள்ளார் ஆல்யா. இவர் அடுத்ததாக சன் டிவியின் புதிய தொடரில் இணையவுள்ளார். தனக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்த விஜய் டிவியை விட்டுவிட்டு தற்போது சன் டிவியில் இணையவுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

குழந்தை பிறந்த நிலையிலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார் ஆல்யா. தொடர்ந்து அடுத்தடுத்த டான்ஸ் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பல விளம்பரங்களிலும் இவர் நடித்திருந்தார்.

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

இந்நிலையில் இவர் மீண்டும் புத்தம் புதிய சீரியலில் இணையவுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் ஆல்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் நடிப்பதற்காக தன்னை தயார் படுத்தி வருகிறார் ஆல்யா. அவர் பாக்சிங் பிராக்டீஸ் செய்யும் வீடியோவை அவரது கணவர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

உடல் குறைத்த ஆல்யா

உடல் குறைத்த ஆல்யா

குழந்தை பிறந்தபோது ஆல்யா மிகவும் குண்டாகவும் காணப்பட்ட நிலையில், தற்போது தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு ஆல்யா மிகச்சிறந்த உதாரணமாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X