கும்முன்னு இறங்கிக் குத்திய ஆலியா.. எஞ்சாய் எஞ்சாமிக்கு செம ஆட்டம்!

சென்னை: இவ்வளவு நாளா குடும்ப குத்துவிளக்காக நினைத்துக் கொண்டிருந்தான் ராஜா ராணி மானசாவா இது என அனைவரும் அசந்து போகிற அளவிற்கு குக்கூ பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார் .

இவரின் இந்த வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் படு வைரலாக பரவி வருகிறது.

ராஜா ராணி சீரியலில் செம்பா கேரக்டரில் அனைவரின் மனதிலும் பசைபோல ஒட்டிக் கொண்ட ஆலியா மானசா அதற்குப் பிறகு திருமணம் முடிந்து இருந்தாலும் நான் இன்னமும் அதே கவர்ச்சியான அழகில் தான் இருந்து வருகிறேன் என சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறார் .

சோசியல் மீடியாவில் ஆக்டிவ்

சோசியல் மீடியாவில் ஆக்டிவ்

இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருவதால் இவரை தெரியாத ரசிகர்களே இல்லை என கூறும் அளவிற்கு ரொம்பவே பாப்புலராகி விட்டார். அதுவும் இவரும் இவரது கணவரும் செய்யும் லூட்டிகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் .அந்த மாதிரி தான் தற்போது ஆலியா மானசா அவருடன் நடிக்கும் நடிகர் உடன் ஆடிய குத்தாட்டம் வைரலாக பரவி வருகிறது.

எஞ்சாய் எஞ்சாமி

எஞ்சாய் எஞ்சாமி

தற்போது ரொம்பவே டிரெண்ட் ஆக இருக்கும் குக்கூ பாட்டுக்கு பல நடிகைகள் ஆட்டம் போட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகைகளை எல்லாமே ஓரம் கட்டுற அளவுக்கு அதுவும் ஒரிஜினல் டான்ஸை கூட ஓரம் கட்டுற அளவிற்கு சேலை கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்ட ஆலியா மானசா அதை பார்த்ததும் வாயடைத்துப்போய் ரசிகர்கள் என்னது இவரா இப்படி என புலம்பி வருகின்றனர் .

குக்கூ டான்ஸ்

குக்கூ டான்ஸ்

முதல் சீரியலில் கிராமத்துப் பெண்ணாக வீட்டின் வேலைக்காரப் பெண்ணாக அமைதியின் சொரூபமாக நடித்திருந்தார் .ஆனால் தற்போது அதே சீரியலில் இரண்டாம் பாகத்திலும் அதே பாணியில் குடும்ப குத்து விளக்காக இவர் ஜொலித்துக் கொண்டு இருந்தாலும் இவருடைய அழகால் புது ஹீரோயினிகள் எத்தனை பேர் வந்தாலும் அனைவரையும் ஓரம் கட்டிவிட்டார்.

அழகான பெண் குழந்தை

அழகான பெண் குழந்தை

சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலிப்பது ஒன்றும் புதிதல்ல ஆனால் திருமணம் முடிந்தபிறகும் இண்ணமும் காதலர்களாக சுற்றிக் கொண்டிருப்பது பெரியது தான் இவர்களுடைய காதல் ஆழமானதாகவும் ஜாலியாகவும் இருப்பதால்தான் இவர் மீண்டும் கதாநாயகியாகவே களமிறங்கியிருக்கிறார் .இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாலும் இப்ப வரைக்கும் இவர்களின் காதல் குறையாமல் அடிக்கடி சர்ப்ரைஸ் வீடியோக்களை போட்டு தங்களுடைய காதலை உலகிற்கு தெரிவித்து வருகின்றனர் .

வீடியோ வாழ்த்து

வீடியோ வாழ்த்து

அந்த மாதிரி தான் தற்போது கூட ஆலியா மானசாவிற்காக அவரது கணவர் ஒரு கார் பரிசு அளித்து இருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் இவர்களின் ரசிகர்கள் ரொம்பவே குஷியாக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதுவுமில்லாமல் இவர்களின் குழந்தையின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர்களின் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை போஸ்ட் போட்டு இருந்தனர் .

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

அதிலும் லைவ் வந்து இவர் பேசியதால் இவருடைய ரசிகர்கள் ரொம்ப சந்தோஷமாகி மேலும் இவர்களின் குட்டி பாப்பாவிற்குகாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .இந்த நிலையில் இவர்களின் பாலோவர்ஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் அதை செலபப்ரேட் பண்ணி வீடியோக்களை போட்டிருக்கின்றனர். இந்த மாதிரி தொடர்ந்து இவர்கள் ஆக்டிவாக இருந்து வருவதால் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர் .

செம ஆட்டம்

செம ஆட்டம்

இப்போ இருக்கும் சூழ்நிலையில் ஒரு ஹீரோயினி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறாரா என தெரிந்து கொள்வதற்கு அவரின் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை பொறுத்தே முடிவு செய்து வருகின்றனர். அதிலும் ஆலியா மானசாவை சொல்லவே வேண்டாம். இவர் ஒரு குழந்தை பிறந்த பிறகும் இந்த அளவிற்கு ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் .மூன்று மில்லியன் பாலோவர்ஸ்கள் இருந்து வருகின்றனர்.

நடிகருடன் குத்தாட்டம்

நடிகருடன் குத்தாட்டம்

ஆலியா மானசா சூட்டிங் ஸ்பாட்டில் செம ஜாலியாக கலக்கி வருவார் .அவரின் சூட்டிங் கூட அவரது கணவரும் சென்று அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவார். ஆனால் தற்போது கணவருடன் இவர் வீடியோ வெளியிடாமல் சீரியலில் நடிக்கும் நடிகருடன் இந்த மாதிரி ஒரு குத்தாட்டத்தை போட்டிருப்பது தான் வைரலாக பரவி வருகிறது.

சேட்டைக்காரியாம்

சேட்டைக்காரியாம்

இவர் சீரியலில் மட்டும்தான் கணவனின் பேச்சுக்கு எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார் .ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து தான் ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர். இவரா இப்படி எல்லாம் இருக்கிறார் என பெருமூச்சு விட்டு இருக்கின்றனர். சும்மா சொல்லக் கூடாது சாமி.. பாட்டும், டான்ஸும் செம பொருத்தம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X