போட் ஹவுஸை தொடர்ந்து மெர்சிடஸ் பென்ஸ் கார்.. சைலன்ட்டா வேலை பார்த்து ராணி போல வாழும் ஆல்யா மானசா!
சென்னை: சீரியலில் நடித்தே கோடிக் கணக்கில் சொத்துக்களை குவித்து வருகிறார் நடிகை ஆல்யா மானசா. தனது கணவரும் சீரியல் நடிகர் என்பதால் இருவரும் இணைந்து அடுத்தடுத்து போட் ஹவுஸ் மற்றும் சொகுசு கார் என வாங்கி வருகின்றனர். புதிய சொகுசு காரை வாங்கிய வீடியோவை வெளியிட்டு ஆல்யா மானசா போட்டுள்ள கேப்ஷன் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஒரு காலத்தில் சின்னத்திரை நயன்தாராவாக நடிகை வாணி போஜன் கலக்கி வந்தார். அவர் சினிமாவில் சமீப காலமாக கிடைக்கும் பட வாய்ப்புகளை பயன்படுத்தி ஹீரோயினாக அப்கிரேட் ஆகிவிட்டார். அதன் பின்னர் ஏகப்பட்ட சீரியல் நடிகை போட்டி போட்டு நடித்து வரும் நிலையில், சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கவர்ந்த நடிகையாக ஆல்யா மானசா வலம் வருகிறார்.

2 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு படகு வீட்டை சமீபத்தில் கேரளாவில் வாங்கியிருந்த ஆல்யா மானசா மணிமேகலை உள்ளிட்ட பிரபலங்களை தனது போட் ஹவுஸுக்கு கூட்டிச் சென்று நடத்திய வீடியோ ஷூட் பலரது பார்வைகளை கவர்ந்த நிலையில், தற்போது புதிதாக சொகுசு கார் ஒன்றையும் ஆல்யா மானசா வாங்கியிருக்கிறார்.
2 கோடி ரூபாய் மதிப்பில் போட் ஹவுஸ்: கேரளாவில் ஏகப்பட்ட சுற்றுலா பயணிகளை போட் ஹவுஸ் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், நடிகை ஆல்யா மானசா கார் வாங்கி கால் டாக்ஸி நடத்துவதை விட போட் ஹவுஸ் வாங்கிப் போட்டு பெரிய வருமானத்தை பார்க்கலாமே என 2 கோடி ரூபாய்க்கு போட் ஹவுஸ் ஒன்றையே சொந்தமாக சமீபத்தில் வாங்கி பல சின்னத்திரை நடிகர்களையும் சில வெள்ளித்திரை நடிகைகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். போட் ஹவுஸில் ஒரு ரூமின் ஒரு நாள் வாடகையே ஒரு குடும்பத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் மேல் வருவது குறிப்பிடத்தக்கது.
பென்ஸ் கார் வாங்கியாச்சு: இந்நிலையில், நேற்று புதிதாக கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரை ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் சென்று வாங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை ஷேர் செய்த ஆல்யா மானசா உழைப்பின் தத்துவத்தையும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
சைலன்ட்டாக வேலை செய்யுங்க: "சத்தமே இல்லாமல் கடின உழைப்பைக் கொட்டி வேலை செய்யுங்கள், உங்களுடைய சத்தம் இது போன்ற சில சொகுசு கார்கள் சாலையில் எழுப்பட்டும், எதுவுமே முடியாது என முடங்கிக் கிடப்பது முட்டாள்த்தனம்" என ஆல்யா மானசா அந்த வீடியோவை ஷேர் செய்து கேப்ஷன் கொடுத்துள்ளார். அதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் போட்டும் வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.
ஆல்யா மானசா சொத்து மதிப்பு: ராஜா ராணி 2 சீரியலில் லீடு ரோலில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ஆல்யா மானசா அடுத்து இனியா சீரியலிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இன்ஸ்டாகிராமிலும் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீபத்தில் சொந்தமாக 1.8 கோடி ரூபாயில் வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்திய ஆல்யா மானசா 2 கோடி மதிப்பிலான போட் ஹவுஸ், 90 லட்சத்துக்கு சொகுசு பென்ஸ் கார் என அடுத்தடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறார். இந்நிலையில், அவருடைய சொத்து மதிப்பு சுமார் 10 கோடி வரை இருக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











