Don't Miss!
- News தோல்வி உறுதி என்றதுமே "ஒப்பாரி" பாட ஆரம்பிச்சிட்டாங்க.. பாஜக வேட்பாளர்களை விமர்சித்த கி.வீரமணி!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அமலாபால் செட்டில்... 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ‘பழைய’ அமலா !
சென்னை: நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு, சினிமாவிற்கு 'பை பை' சொன்ன நடிகை அமலா, 23 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
1980 மற்றும் 90-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இவர் நடித்த பல படங்கள் வெற்றி விழா கண்டவை.
திருமணம்...
தமிழைப் போலவே தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்த அமலா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
பிராணிகள் பாதுகாப்பு...
திருமணத்திற்குப் பின் குடும்பம், சமூக சேவை என தன் கவனத்தை வேறு திசையில் திருப்பினார். தற்போது பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
மறுப்பு...
இதற்கிடையே, கணவரின் திரைப்பட விழாக்களில் அவ்வப்போது தலை காட்டிய அமலா, தனக்கு படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.
மெகா சீரியல்....
ஆனால், தற்போது தமிழில் தயாராகும் டி.வி. தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளாராம் அமலா. கதை பிடித்திருந்ததால் அத்தொடரில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
சென்னைப்பட்டணம்...
இதுகுறித்து அமலா கூறும்போது, ''சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். சினிமாவில் நடிப்பது பற்றி உடனடியாக முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதற்கு சில காலம். ஆகலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
டாக்டர்...
மேலும், சீரியலில் தன் கதாபாத்திரம் குறித்து கூறுகையில், 'இந்த சீரியலுக்கு உயிர்மை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நான் டாக்டராக நடிக்கிறேன்.
கதைக்களம்...
மொத்தம் 12 டாக்டர்களின் வாழ்க்கையைச் சுற்றி கதைக்களம் அமைக்கப் பட்டுள்ளது. சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பைத் தொடங்கும் என எதிர்பார்க்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார் அமலா.