twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் சுத்த சைவம்… அமலாவின் பிட்னெஸ் சீக்ரெட்

    By Mayura Akilan
    |

    23 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் உயிர்மெய் என்ற நெடுந்தொடர் மூலம் தமிழ்நாட்டு சின்னத்திரைக்கு வந்துள்ளார் நடிகை அமலா.

    அன்று சத்யாவில் வலையோசை கலகலகலவென பாடிய அமலாவாகத்தான் இன்றும் இளமையாய் இருக்கிறார். டீன் ஏஜ் பையனின் அம்மா அமலா, இன்றைக்கும் கதாநாயகி தோற்றத்துடன் இருக்கக் காரணம் யோகா, தியானம், அவர் பின்பற்றும் டயட்தானாம்.

    இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க காரணம் என்ன என்பதை அவரே சொல்கிறார் கேளுங்கள்.

    நடிக்கிற ஐடியா இல்லை

    நடிக்கிற ஐடியா இல்லை

    '1992-ல் கல்யாணம். அகில் பிறந்தான். எப்பவுமே திரும்ப நடிக்கிற ஐடியா இல்லை. நடுவில் டைரக்டர் சேகர் கம்மூலா வேண்டிக் கேட்டுக்கிட்டதால், 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' மட்டும் நடிச்சேன்.

    சமூக அக்கறை சீரியல்

    சமூக அக்கறை சீரியல்

    உயிர்மெய் சீரியலின் தயாரிப்பாளர் ரமேஷ் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னைச் சந்திச்சு, 'மருத்துவமனை, மருத்துவர்கள் பத்தின ஸ்க்ரிப்ட். அதை பொதுமக்களிடம் ரீச் பண்ண வைக்க நீங்க அவசியம் நடிக்கணும்'னு கேட்டார். சீரியலில் இருந்த சமூக அக்கறை எனக்குப் பிடிச்சிருந்தது.

    விலங்குகள் நல அமைப்பு

    விலங்குகள் நல அமைப்பு

    சினிமா விட்டு விலகினாலும் சமூக சேவை செய்கிறேன். விலங்குகள் நலனுக்காக 'ப்ளூ கிராஸ் ஆஃப் ஹைதராபாத்' அமைப்பு ஆரம்பிச்சு, 200 மிருகங்களைப் பராமரிக்கிறேன்.

    எய்ட்ஸ் நோயாளிகள் பராமரிப்பு

    எய்ட்ஸ் நோயாளிகள் பராமரிப்பு

    ஹெச்.ஐ.வி பற்றி விழிப்புணர்வு இல்லாத 90-களில் நிறைய வேலைகள் பார்த்தேன். ஆந்திராவில் அப்ப ஹெச்.ஐ.வி குழந்தைகளை பள்ளிகளில் இருந்து ஒட்டுமொத்தமா வெளியே அனுப்பிட்டாங்க. 'ஒரு அம்மாவா நீங்க அவங்களுக்குப் புரிய வைங்க'னு ஆந்திர அரசாங்கம் என்கிட்ட கேட்டாங்க. பல வேலைகள் பண்ணி மக்கள் மனசுல ஹெச்.ஐ.வி பற்றிய புரிதல் ஏற்படுத்தினதில், என் பங்கும் அணில் அளவுக்கு இருக்கு.

    பிட்னெஸ் ரகசியம்

    பிட்னெஸ் ரகசியம்

    மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த பொருட்கள்கூட இல்லாத ப்யூர் சைவம்' நான். யோகா, தியானம் சேர்த்துக்கிட்டா, கண்டிப்பா உடம்பு உங்க சொல் பேச்சு கேட்கும் என்கிறார் அமலா.

    அவித்த உணவுகள்

    அவித்த உணவுகள்

    ஃப்ரெஸ் உணவுகள் மட்டுமே நல்லது. அவித்தவை மட்டுமே போதும். வறுத்த, பொறித்த உணவுகள் கூடவே கூடாது. ஒரு வேளை மட்டுமே குறைந்த அளவு அரிசி, அதுவும் கைக்குத்தல் அரிசி சாப்பிடலாம். காலையில் கேரட் ஜூஸ். தோசையாக அல்லது கஞ்சியாக ராகி. முதல் நாள் இரவே ஊறவைத்த 10 பாதாம் பருப்புகள், கொஞ்சம் பழங்கள். மதியம் இரண்டு ஃபுல்கா, காய்கறி, கொஞ்சம் கைக்குத்தல் அரிசி சாதம். இரவு எல்லா காய்கறிகளும் போட்டு செய்த அவியல்.

    எள் உருண்டை, கடலை உருண்டை

    எள் உருண்டை, கடலை உருண்டை

    பழங்கள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். கால்சியம் சத்துக்கு எள் உருண்டையே போதும். அதில் பாலைவிட 10 மடங்கு கால்சியம் அதிகம் இருக்கு. தினமும் எள் உருண்டை, கடலை உருண்டை சாப்பிடுவது நல்லது என்கிறார் அமலா.

    ஆகஸ்ட் 18 முதல்

    ஆகஸ்ட் 18 முதல்

    உயிர்மெய் தொடர் 12 மருத்துவர்களைப் பற்றிய மெகா தொடராம் இது. அமலா 12 பேர்களில் ஒருவராக நடிக்க உள்ளார். ஆகஸ்ட் 18 முதல் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

    English summary
    Amala Akkineni, who has been missing in action on the silver screen, is all set to be seen in a Tamil television serial UyirMey. The actress plays a doctor in the television series. " Now we hear that the serial is all set to be aired on August 18 on Zee Tamizh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X