குக் வித் கோமாளி பிரியங்காவுக்கு பிறந்தநாள்.. யாரோட பர்த்டேவை கொண்டாடியிருக்காரு பாருங்க!

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே தனது 32-வது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார். தனது பிறந்தநாளை சந்தோசமாக தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாடிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் பிரியங்கா கடந்த பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னதாக பிக் பாஸ் பிரியங்கா ஆகவே ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.

Amir and Pavani send birthday wishes to Priyanka Deshpande with a recent video


தனது பிறந்தநாளையும் பிக் பாஸ் பிரபலங்களுடன் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பல டிவி சேனல்களில்: விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பாக ஜீ தமிழில் திஸ் சிற்பி கேர்ள், அழகிய பெண்ணே, இசை அன்பிளக்ட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சுட்டி டிவியில் டாடி மை ஹீரோ, சன் மியூசிக்கில் மாமிஸ் டே அவுட், சன் டிவியில் சூரிய வணக்கம் என பல நிகழ்ச்சிகளை பல டிவி சேனல்களில் தொகுத்து வழங்கியுள்ளார்.

விஜய் டிவியில் செட்டில்: சினிமா காரன் காப்பிய நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு வந்த பிரியங்கா கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், கிச்சன் சூப்பர் ஸ்டார், கிங்ஸ் ஆப் டான்ஸ், கனெக்சன், அச்சம் தவிர், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் 6,7,8,9, ஸ்டார்ட் மியூசிக், பிக் பாஸ், காமெடி ராஜா கலக்கல் ராணி, ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா, சூப்பர் சிங்கர் ஜூனியர் ஒன்பதாவது சீசன், சூப்பர் சிங்கர் பத்தாவது சீசன் தற்போது கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் என ஏகப்பட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.


32-வது பிறந்தநாள்: கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த பிரியங்கா தேஷ்பாண்டே எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னையில் டிவி சேனல்கள் தொகுப்பாளினியாக தனது பணியை தொடங்கினார். 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி பிறந்த பிரியங்கா இன்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அமீர் மற்றும் பாவனியுடன்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனியுடன் நல்ல நட்பு ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு பிறந்த நாளையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடி உள்ளார். பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்த அமீர் அவருடன் ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது லேட்டஸ்ட் வீடியோவா அல்லது த்ரோபேக் வீடியோவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X