twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பல்பு வாங்கிய பார்வதி.. சர்வைவரில் இரண்டாவது வார கேப்டன்கள் யார்? ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது!

    |

    சென்னை: சர்வைவர் தமிழ் 10வது எபிசோடில் இரண்டாவது வாரத்துக்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது.

    இந்த வாரம் எப்படியாவது வேடர்கள் கேப்டனாக மாறி விட வேண்டும் என எலிமினேஷன் பயத்தால் பறிதவித்த சர்வைவர் ஜூலி பார்வதிக்கு கடைசியில் பல்பு மட்டுமே கிடைத்தது.

    காடர்கள் நிலை ஏற்கனவே பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கும் போது அவர்கள் வேடர்களை பார்த்து அப்படி கலாய்ப்பது ரசிகர்களையே காண்டாக்கியது.

    சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாய் வெளியேறிய நடிகை சிருஷ்டி டாங்கே.. இன்ஸ்டாவில் உருக்கம்! சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாய் வெளியேறிய நடிகை சிருஷ்டி டாங்கே.. இன்ஸ்டாவில் உருக்கம்!

    முதல்வாரம் ஓவர்

    முதல்வாரம் ஓவர்

    சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் முதல்வாரம் சிருஷ்டி டாங்கேவின் எலிமினேஷன் உடன் நிறைவு பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். முதல்வாரத்தில் காடர்களின் கேப்டனாக இருந்த காயத்ரி ரெட்டியே மூன்றாம் உலகத்தில் உள்ள நிலையில், இரண்டாவது வார கேப்டன் போட்டி நேற்று நடைபெற்றது.

    பார்வதிக்கு பயம்

    பார்வதிக்கு பயம்

    வேடர்கள் அணியின் கேப்டனாக ஒரு வாரத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த லட்சுமி ப்ரியாவுக்கு அடுத்து நாம தான் கேப்டனாக வேண்டும் என்றும் அப்போது தான் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் என நினைத்த பார்வதி எப்படியாவது கேப்டனாக வேண்டும் என ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால், எதிர்பார்த்தது போலவே அவருக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை.

    காடர்கள் அணி தலைவி

    காடர்கள் அணி தலைவி

    இந்த முறை எப்படியாவது விஜயலட்சுமியை காடர்கள் அணி தலைவியாக நியமிக்க வேண்டும் என அந்த அணி முடிவு செய்ததை போலவே அதிக ஓட்டுக்கள் விஜயலட்சுமிக்கு விழுந்தது. சரண் உடன் மோதினால் ஜெயிக்க முடியாது என நினைத்த அவர் தனக்கு எதிராக லேடி கேஷையே நிற்க வைத்தார். மண்டை ஓடு கீழே விழாமல் எப்படி விளையாட வேண்டும் என முதல் இரு சுற்றுகளில் அறிந்து கொண்ட விஜயலட்சுமி அசால்ட்டாக விளையாடி காடர்கள் அணி தலைவியாக வெற்றி பெற்றார்.

    அம்ஜத் கான் அசத்தல்

    அம்ஜத் கான் அசத்தல்

    பார்வதியை அணியினர் ஓட்டுப் போடாமல் நோஸ் கட் பண்ண பெசன்ட் ரவிக்கு அதிக ஓட்டுக்கள் விழுந்தன. ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட அம்ஜத் கான் அசத்தலாக விளையாடி ரவியை வீழ்த்தி வேடர்கள் அணி தலைவராக வெற்றி வாகை சூடினார். தோல்வியை தழுவிய வருத்தம் லேசாக பெசன்ட் ரவிக்கும் ஏற்பட்டது அவர் பேசிய அந்த கடைசி பஞ்ச் மூலமே தெரிந்தது.

    ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது

    ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது

    சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை பொறுத்தவரை குரூபிசம் வேலைக்காகது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அனைவரும் சேர்ந்து ஒருவருக்கு ஓட்டுப் போட்டாலும் அவரது தனித் திறமையை நிரூபித்தால் மட்டுமே கேப்டனாக முடியும் என்றும் எலிமினேஷனிலும் அதே நிலைமை தான் என்பதையும் சர்வைவர் தமிழ் தொடர்ந்து விளக்கி வருகிறது.

    வாய் சொல் வீரர்கள்

    வாய் சொல் வீரர்கள்

    இதுவரை வேடர்கள் அணியினர் இரு முறை வெற்றிப் பெற்றுள்ளனர். ஆனால், காடர்கள் அணியினர் ஒரு முறை கூட எதிலும் தங்கள் திறமையை இன்னமும் நிரூபிக்கவில்லை. இந்நிலையில், காடர்கள் அணியினர் வேடர்கள் அணி குறித்து அடித்த கமெண்ட் ரசிகர்களையே கடுப்பாக்கி உள்ளது. வேடர்கள் அணியில் பார்வதி ஓவராக வாய் ஆடினாலும் டாஸ்க் என வரும் போது மற்றவர்களை விட சிறப்பாகவே செய்து முடிக்கிறார். வேடர்கள் அணியில் ராம், விக்ராந்த் எல்லாம் வெறும் வாய் சொல் வீரர்களாகவே இதுவரை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Amjadh Khan and Vijayalakshmi won Survivor Tamil second week captaincy task. Vj Parvathy upset over not selected as captain in Survivor Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X