twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Amman film: ஆத்தாடி மாரியம்மா.. ஆடியும் வந்தாச்சு... அம்மன் படங்களும் வந்தாச்சு!

    |

    சென்னை: சன் டிவியில் இன்று மதியம் 3:30 மணி நேர படமாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் மறைந்த நடிகை சவுந்தர்யா நடித்த அம்மன் படத்தை ஒளிபரப்பினர். அதைப் பார்த்தபோது மனதுக்குள் ஆகா ஆடி மாதம் பொறந்திருச்சா என்ற எண்ணம் மேலோங்கியது.

    இன்று ஆடி மாதம் 1 ம் தேதியை முன்னிட்டு, அம்மன் படத்தை டெலிகாஸ்ட் செய்து வருகிறது சன் டிவி. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு சுவாமி படம், அதுவும் அம்மனைப் பற்றிய படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் இது.

    தெலுங்கு மொழியில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த படம் அம்மன். ரம்யா கிருஷணனுக்கு பெயர் புகழையும், சவுந்தர்யாவுக்கு பெரும் மார்க்கெட்டையும் தந்த படம் இந்த அம்மன் படம்.

    சிந்தாமணி பொன்னுமணி

    சிந்தாமணி பொன்னுமணி

    பொன்னுமணி திரைப்படத்தின் சிந்தாமணி கதாபாத்திரம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சவுந்தர்யா, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர். சென்னையில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷணன், சத்யராஜ், மலேசியா வாசுதேவன் வில்லனாக சேர்ந்து நடித்த முதல் வசந்தம் படத்தின் மூலம் திரை உலகத்துக்கு அறிமுகமானவர். அப்போது அறிமுகமான ரம்யா கிருஷ்ணனுக்கும் அவ்வப்போது வாய்ப்புக்கள் வந்ததே தவிர சூப்பர் ஹிட் நடிகையாக அவரால் வலம் வர முடியவில்லை. அதே நேரம், இவருக்கு பின்னால் பல வ்ருடங்கள் கழித்து அறிமுகமான நடிகை சவுந்தர்யாவுக்கு அடுத்தடுத்து படங்கள் அமைவதே சிரமமாக இருந்தது.

    வாய்ப்பு இல்லையே ஏன்?

    வாய்ப்பு இல்லையே ஏன்?

    சவுந்தர்யா பொன்னுமணி படத்தில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடிக்கும்போது, ரொம்ப சின்ன பெண்ணாக இருந்தாங்க. இருந்தாலும், கடைசியில் கொஞ்சம் பைத்தியம் ஆனது போல நடிக்கும் போது, மூன்றாம் பிறை ஸ்ரீதேவியான்னு எல்லாரும் கிண்டல் பண்ணும் அளவுக்கு படம் இருந்தது. நடிகை சவுந்தரியாவுக்கு தமிழில் அடுத்தடுத்து படங்கள் அமையாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. இதனால்,தெலுங்கு பக்கம் போன சவுந்தர்யாவுக்கு வாய்ப்புக்கள் குவிந்தன.

    உண்டியலில் கூட காசு

    உண்டியலில் கூட காசு

    இந்த சமயத்தில்தான் அம்மனாக நடிகை ரம்யா கிருஷ்ணனும், அம்மனின் அருமையான பக்தையாக சவுந்தர்யாவும் ஒன்று சேர்ந்து, அம்மன் படத்தில் நடித்தார்கள். படம் எதிர்பார்த்ததை விட சூப்பர் டூப்பர் ஹிட். ரம்யா கிருஷணன் ஒரு குடிசை வீட்டில் அம்மன் சிலையாக எப்படி முழு உருவமாக இல்லாமல், லிங்க வடிவம் போன்று சிலையாக மாறி, அதற்கு அழகான, இரு கண்கள், தொங்கும் நாக்கு என்று உருவம் அமைந்ததோ, அந்த உருவ அம்மனை தியேட்டர் வாயிலில் உரிமையாளர்கள் வைத்துவிட, அந்த உண்டியலில் கூட காசு சேர்ந்தது. இதே நிலை அந்த படம் தமிழகத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான போதும் அமைந்தது.

    எகிறியது மார்க்கெட்

    எகிறியது மார்க்கெட்

    அம்மன் படம் வந்த பிறகு நடிகை சவுந்தர்யாவுக்கு, தமிழ் தெலுங்கு என்று படங்கள் குவிந்தன. ரம்யா கிருஷணனுக்கும் மரியாதை கூடியது. நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தன. இப்படி இருக்கையில்தான் சூப்பர் ரஜினியுடன் அருணாச்சலம் படத்தின் மூலம் சவுந்தர்யா மீண்டும் தமிழுக்கு வந்து, கமல்ஹாசனுடன் ஜோடி, அடுத்து விஜயகாந்துடன் ஜோடி என்று அடுத்தடுத்து படங்கள் நடிக்க ஆரம்பித்து இருந்தார்.

    இணைந்து படையப்பா

    இணைந்து படையப்பா

    இப்படி அம்மன் படத்தின் மூலம் இணைந்தவர்கள், பல வருடங்களுக்குப் பிறகு, படையப்பா படத்தில் ரஜினிக்கு இரு ஜோடிகளாக இந்த இரண்டு ஹிட் ஸ்டார்ஸும் சேர்ந்து நடித்தார்கள். நடிகை ரம்யா கிருஷ்ணன் அம்மன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், ஆக்ரோஷ அம்மனாக நடனம் ஆடி, மக்களை கவர்ந்தார். இதே போன்று படையப்பா படத்தில், ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு போயி, தன்னைத்தானே சுட்டுக் கொண்டும் மக்களை கவர்ந்தார்.

    அண்மையில் இயக்குநர் ராஜமவுலியின் பாகுபலி படத்தில் நடித்து தன்னை மீண்டும் நிரூபித்தும் புதுப்பித்தும் உள்ள ரம்யா கிருஷணனின் அம்மன் படத்தை ஆடித் திருநாளில் கண்டு மகிழுங்கள். இனி ஆடி முடியும் வரை அம்மன் படங்கள் களை கட்டும்.. ஆடிக் கூழும் தூள் பறக்கும். கூடவே அம்மி பறக்கும் புயல் காற்றும்.

    English summary
    Ramya Krishnan and the late actress Soundarya starrer Amman are airing on Sun TV today at 3:30 pm.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X