அம்மு அபிராமிக்கு அப்பா கொடுத்த சக்சஸ் டிப்ஸ்.. இறுதிப்போட்டியில் நெகிழ்ச்சிப் பகிர்வு!

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்துள்ளது.

Recommended Video

CWC | சிறப்பாக நடந்து முடிந்த Cook With Comali 3 நிகழ்ச்சி! *TV | Filmibeat Tamil

இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை ஸ்ருதிகா வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்த இடங்களை தர்ஷன் மற்றும் அம்மு அபிராமி பெற்றனர்.

முதல் சுற்றில் கடினமான டாஸ்க்கை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி கொண்டார் அம்மு அபிராமி. அடுத்த சுற்றில் இறுதியாக வந்தார். ஆனால் 3வது சுற்றில் சுதாரித்துக் கொண்டார்.

குக் வித் கோமாளி சீசன் 3

குக் வித் கோமாளி சீசன் 3

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் முன்னிலையில் உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த சேனலின் முதன்மையான நிகழ்ச்சியாக உள்ள நிலையில், அடுத்த இடத்தில் இந்த நிகழ்ச்சிதான் உள்ளது. தங்களது ஸ்ட்ரெசை குறைக்க இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவிவருவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இந்த காலகட்டத்தில் மக்களுக்கு அதிகமான மனஉளைச்சல்கள் ஏற்பட்டு ஸ்ட்ரெஸ் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஸ்ட்ரெஸ்களுக்கு பஸ்டராக இந்த நிகழ்ச்சி காணப்படுவதாகவும் நிகழ்ச்சியை சீசனாக ஒளிபரப்பாமல், தொடர்ந்து ஆண்டு முழுவதும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மூன்றாவது சீசன் நிறைவு

மூன்றாவது சீசன் நிறைவு

இதனிடையே நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்துள்ளது. இதில் நேரடியான போட்டியாளர்கள், வைல்ட் கார்ட் என்ட்ரிமூலம் இணைந்தவர்கள் என 6 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். இதில் அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகாவுடன் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

6 போட்டியாளர்கள்.. 3 சுற்றுகள்

6 போட்டியாளர்கள்.. 3 சுற்றுகள்

வைல்ட் கார்ட் மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் இறுதிப்போட்டியில் என்ட்ரி கொடுத்தனர். நேற்றைய தினம் 3 சுற்றுகள் மற்றும் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் போட்டி நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் சாக்லேட் சிரப் மற்றும் ஜாங்கிரி மாவில் பேர் எழுதும் வித்தியாசமான டாஸ்கில் வெற்றி பெற்றார் அம்மு அபிராமி.

அம்மு அபிராமிக்கு 3வது இடம்

அம்மு அபிராமிக்கு 3வது இடம்

ஆனால் அடுத்த சுற்றில் அவர் கோட்டை விட்டார். 6 போட்டியாளர்களில் 40க்கு 20 மார்க்குகள் மட்டுமே பெற்று 6வது இடத்தையே பிடித்தார். ஆனால் தொடர்ந்து மூன்றாவது சுற்றில் சுதாரித்துக் கொண்ட அவர், சிறப்பான மதிப்பெண்களுடன் விட்டதை பிடித்தார். இதையடுத்து இந்த சீசனில் 3வது இடம் அவருக்கு கிடைத்துள்ளது.

கண்கலங்கிய அம்மு அபிராமி

கண்கலங்கிய அம்மு அபிராமி

இதையடுத்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கனார் அம்மு அபிராமி. அவருக்கு வெற்றி சாத்தியப்படாது என்று நினைத்த நிலையில், 3வது இடம் கிடைத்தது அவரை உணர்ச்சிவசப்படுத்தியது. அவரும் வித்தியாசமான டிஷ்களை கொடுத்திருந்தார். இதன்மூலம் நடுவர்களையும் கவர்ந்திருந்தார்.

 இரவு முழுவதும் அழுகை

இரவு முழுவதும் அழுகை

கோப்பையை அவர் பெற்றவுடன் கண்கலங்கினார். இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த அவரது அப்பா, ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகும் நிலை ஏற்பட்டபோது வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் அம்மு அபிராமி அழுததாகவும் தான் அவரை தேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்பா கொடுத்த வெற்றி டிப்ஸ்

அப்பா கொடுத்த வெற்றி டிப்ஸ்

ஒரு கட்டத்தில் அம்மு அபிராமியைத் தேற்றிய அவரது அப்பா, அழுவதை நாளை கூட செய்து கொள்ளலாம், ஆனால் பயிற்சியை இன்று மட்டுமே செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அழுவதை நிறுத்திக் கொண்ட அம்மு அபிராமி, அந்த நள்ளிரவில் தன்னுடைய குக்கிங் பயிற்சியை தொடர்ந்துள்ளார்.

குவிந்த வாழ்த்துக்கள்

குவிந்த வாழ்த்துக்கள்

இதை குறிப்பிட்ட அவரது அப்பாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. இரண்டாவது ரன்னர் அப்பாக வந்த அம்மு அபிராமிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. தொடர்ந்து அவர் வெற்றிக்கு உதவிய தன்னுடைய அப்பா மற்றும் சக போட்டியாளர்கள், கோமாளிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவருக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X