நான் தான் புருஷன்.. கல்யாணமானதை மறைக்குறாங்க.. சீரியல் நடிகை மீது புகாரளித்த உதவி இயக்குநர்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஸ்வேதா தான் என் மனைவி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என்னை யார் என்றே தெரியாது என சொன்னவர் இப்போ எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என பேட்டி அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'சின்ன மருமகள்'. இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் தான் ஸ்வேதா. கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல யூடியூப் சேனலுக்கு ஸ்வேதாவின் காதலர் என கூறி, ஆதி என்பவர் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால், அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர் பொய் சொல்கிறார் என நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

சீரியல் நடிகை: இந்நிலையில் தற்போது நடிகை ஸ்வேதாவின் காதலர் ஆதி செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் சின்னத்திரை நடிகையின் கணவர், கடந்த சில மாதங்களுக்கு முன் இதை பேட்டியில் நான் கூறியிருந்தார். ஆனால்,நான் சொல்வது பொய், அவர் யார் என்றே தெரியாது என என் மீது பலவிதமான புகாரை கூறியிருந்தார். யார் என்றே தெரியாது என்று சொன்னவர் எப்படி எனக்கு விவாகரத்து மனுவை அனுப்ப முடியும். அந்த விவாகரத்து மனுவிலும் பலவிதமான பொய்களை சொல்லி இருக்கிறார். அவர் பதிவிட்ட வீடியோவால் என்னால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை, நான் ஒரு உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி சென்றாலும், இதை காரணம் காட்டி எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றார்.
விவாகரத்து மனு: தொடர்ந்து பேசிய அவர், இருவரும் ஒரு படப்பிடிப்பில் தான் சந்தித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 3 வருடமாக காதலித்த பின் தான் திருமணம் செய்து கொண்டோம். இத்தனை நாட்களாக என் மீது தான் தவறு என நினைத்து இருந்தேன். ஆனால், இப்போது தான் என் மீது எந்தவிதமான தவறும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.என் மனைவியால் நான் பாதிக்கப்பட்டதைவிட ஒரு பெண் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி பேசுவதற்கான நான் ஸ்வேதாவிடம் பல முறை முயற்சித்தேன். ஆனால், அவர் என் அழைப்பை ஏற்கவே இல்லை. இதற்கு மேலும் சும்மா இருக்கக்கூடாது என்பதற்காக இங்கே வந்து இருக்கிறேன் என்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது என் ஆதி பேட்டி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











