பெர்லியைப் பத்திவிட்டுட்டு அஞ்சனா வந்துட்டாரா?

சென்னை: ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கேரளாவில் இருந்து வந்த பெர்லியை காணலை.. பதிலா அஞ்சனா வந்து நிக்கறார். இந்த நிகழ்ச்சியை தீபக் சோலோவாகத்தான் தொகுத்த வழங்கி வந்தார். திடீர்னு ஒரு நாள் பெர்லி வந்து நின்றார்.

பெர்லி கொஞ்சும் தமிழில் பேசுவதும், ஜட்ஜ்ஸ் முன் தீபக்குடன் சேர்ந்து கலாட்டா செய்வதும் என்று கலகலப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். சரி, ஜீ தமிழ் டிவிக்கு வித்தியாசமான புதிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரவு என்று ரசிகர்கள் ஆவலாக இருந்த நேரத்தில், வந்துட்டாருங்க அஞ்சனா.

பிரியா ராமன், பூஜா ஏற்கனவே நடுவர்களாக இருந்து வரும் நேரத்தில் மூன்றாவது நபர் மட்டும் அவ்வப்போது மாறி வருவார். நடிகைகள் ஓவியா, பிரியா மணி என்று நடுவர்களாக இருந்தார்கள். அந்த வரிசையில் நமீதா இப்போது இடம் பிடித்து இருக்கார்.

 அஞ்சனா சன் மியூசிக்

அஞ்சனா சன் மியூசிக்

நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஞ்சனா சன் மியூசிக் மூலம் பிரபலம் ஆனவர். இவரும் மணிமேகலையும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருந்தனர். இருவரும் சேர்ந்து சன் மியூசிக் சானலில் மாலை வேளைகளில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்கள். பின்னர் சன் டிவியிலும் அவ்வப்போது நிகழ்ச்சிக்களைத் தனித்த தனியாக தொகுத்து வழங்கி வந்தார்கள்.

 கல்யாணம் இருவருக்கும்

கல்யாணம் இருவருக்கும்

அஞ்சனாவுக்கு கல்யாணம் ஆகி சில மாதங்களில் மணிமேகலைக்கு கல்யாணம் ஆனது. அஞ்சனாவும் இடைவெளி எடுத்துக்கொண்டார், மணிமேகலையு இடைவெளி எடுத்துக்கொண்டார். அந்த இடைவெளி முடிந்த நிலையில், அஞ்சனா புதிய தலைமுறை டிவிக்கு சென்று இருந்தாரா. மணிமேகலை விஜய் டிவிக்கு சென்றுவிட்டார். ஆனால், மணிமேகலை இப்போது ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தீபக்குடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

 அர்ச்சனை மட்டும்தான்

அர்ச்சனை மட்டும்தான்

ஜீ தமிழ் டிவியின் ஆஸ்தான நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா மட்டும்தான் இதுவரை இருந்து வந்தார்.. எதற்கெடுத்தாலும் அர்ச்சனா, எதிலும் அர்ச்சனா. அதுவும் ஜீ தமிழ் டிவிக்கு மட்டுமான விளம்பரம் என்றால் கூட அதில் அர்ச்சனாதான். இவரை விட்டால் வேறு யாருமில்லை என்று வந்தபோது, சரி அர்ச்சனாவின் பெண்ணை இப்போதில் இருந்தே கொண்டு வரலாம் என்று நினைத்தது போல அர்ச்சனாவின் பெண் தாராவும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் அம்மாவுடன் சேர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

 நம்பிக்கை பெர்லி

நம்பிக்கை பெர்லி

சரி பெர்லியும் ஜீ தமிழ் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் இடத்தில் அஞ்சனா வந்து நிற்கிறார். அஞ்சனா நல்ல திறமை சாலி, பெரிய ஸ்டார்ஸ் இன்டர்வியூ என்றால் கூட தெள்ளத் தெளிவாக பேசி, விஷயத்தை சொதப்பாமல் வாங்குவர். அதனால், தீபக்குடன் இவர் சேர்ந்து நிகழ்ச்சியை நன்றாகவே தொகுத்து வழங்குவார் என்று திருப்தி பட்டுக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X