அனாமிகாவும் இல்லை... அனிதாவும் இல்லை... பாவம் நவீன்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் அனிதாதான் நவீனிடம் அனாமிகான்னு பேசி அவன் தன்னை லவ் பண்ண வச்சது.
விளையாட்டா அனிதா ஆரம்பிச்சது... இப்போ நவீன் மேல லவ் உண்டாகி அவளையும் பாதிச்சுருது. நவீனுக்கும் அனிதா மேல லவ் வந்துருது.
ஆனா, அனிதாவின் அப்பா, அனிதாவை தனது அக்கா மகனுக்கு கல்யாணம் செய்து தர்றதா வாக்கு குடுத்துடறார்.

அனிதாவின் அண்ணனுக்கு
அனிதாவின் அண்ணனுக்கு அனிதா தனது இன்னொரு தங்கையான ஜனனியின் கொழுந்தன் நவீனிடம் அனாமிகாவா நடிச்சது தெரிஞ்சுருது. ஏற்கனவே ஒரு பெண்ணை அவங்க வீட்டுக்கு குடுத்துட்டு, அத்தையை ஏமாத்தியாச்சு.

அத்தை மருமகள்
உன்னை அத்தை வீட்டுக்குத்தான் மருமகளாக்க அப்பா நினைச்சு இருக்கார். இப்போ நீ என்னடான்னா நவீனை இப்படி ஏமாத்தி வச்சிருக்கேன்னு அண்ணன் அனிதாவை திட்டறான். ஜனனியையும் திட்டறான்... அனிதாவுக்கு நம்ம அத்தை பையனுக்குத்தான் கல்யாணம் செய்து வைக்க அப்பா ஆசைப்படறார். அப்பாவின் ஆசையில் மண்ணை அள்ளி போட்டுடாதீங்கன்னு அண்ணன் சொல்றார்.

அனிதா அண்ணி
அனாமிகான்னு நான் பேசினது அண்ணியோட தங்கச்சிகிட்டத்தான். இப்போ அனிதாவை நான் லவ் பண்ண ஆரம்பிச்சதும், இப்போ அனிதாவை அவங்க அத்தை பையனுக்கு பேசி முடிச்சு இருக்கங்கண்ணே... அண்ணியும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்கன்னு நவீன் குடிச்சுட்டு அண்ணன்கிட்ட அழறான்.

ஜனனியிடம் சந்தோஷ்
சந்தோஷ் ஜனனியிடம் வந்து என் தம்பியை ரெண்டு பேரும் சேர்ந்து ஏமாத்தி இருக்கீங்க... அப்படி என்னங்க என் தம்பி உங்களுக்கு கெடுதல் செய்தான்.என் தம்பியை ஏமாத்தி,உங்க தங்கச்சியை காப்பாத்திக்கிட்டீங்கன்னு கத்தறான்.
இப்போ நவீனுக்கு அனாமிகாவும் இல்லை... அனிதாவும் இல்லை....


Click it and Unblock the Notifications











