“ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை“ கலங்கிய மனதுடன் செய்து முடித்த மனைவி!

சென்னை : சன் மியூசிக் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் கடந்த வாரம் திடீரென உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆனந்த கண்ணனின் நெருங்கிய தோழியான தொகுப்பாளினி நிஷா, ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை குறித்து கண்கலங்கி கூறினார்.

எப்போதும் சிரித்த முகத்தோடு அனை

வரையும் மிகிழ்வித்த இவருக்கா இந்த நிலை என ரசிகர்கள் கண்கலங்கினர்.

8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

ஆனந்த கண்ணன்

ஆனந்த கண்ணன்

90களில் அனைவருக்கும் பிடித்த விஜேவாக இருந்தவர் ஆனந்த கண்ணன். எப்போதும் சிரித்த முகத்துடன், கலப்பாக பேசுவது இவரின் தனி ஸ்டைல். இந்த ஸ்டைலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏராளமான ரசிகர்கள். குறிப்பாக இளம் பெண்களின் கனவு கண்ணனாக இருந்தார் ஆனந்த கண்ணன்.

குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய்

ஆனந்த கண்ணன் கடந்த வாரம் திடீரென உயிரிழந்தார். இவருக்கு குடல் புற்று நோய் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார். ஆனால், புற்று, இவரது உடல் முழுதும் பரவிவிட்ட நிலையில் காலமானார்.

கடைசி ஆசை

கடைசி ஆசை

இந்நிலையில் ஆனந்த கண்ணனின் நெருங்கிய தோழியான தொகுப்பாளினி நிஷா, ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை கூறியுள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஆனந்த கண்ணன் தனது மரணம் கூட யாரையும் காயப்படுத்தக்கூடாது என்று நினைத்துள்ளார். ஆனந்த கண்ணன் இறப்பதற்கு முன்பாக தனது மனைவி ராணியிடம், சொன்ன கடைசி ஆசை குறித்து கண்கலங்கி கூறினார் நிஷா, என்னுடைய சாவு கல்யாண சாவு மாதிரி இருக்க வேண்டும். வீட்டிற்கு வரும் அனைவரையும் சிரித்த முகத்தோடு வரவேற்க வேண்டும். மேளதாளத்தோடு என்னை தூக்கிச் செல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

கடைசி ஆசை

கடைசி ஆசை

ஆனந்த கண்ணன் மருத்துவமனையில் இருந்த போது தனது மனைவியிடம் இவ்வாறு கூறியிருக்கிறார். அவருடைய கடைசி ஆசையை அவரது மனைவி நிறைவு செய்திருக்கிறார். ஆனந்த, கண்ணனுக்கு நாட்டுப்புற கலைகள் மீது காதல் அதிகம். அவருக்காக நாங்கள் சேர்ந்து இந்த கலைகள் தொடர்பாக ஏதாவது ஒரு விஷயத்தை நிச்சயம் செய்வோம் என்று தொகுப்பாளினி நிஷா உருக்கமுடன் கூறியுள்ளார்.

அழகான தமிழ்

அழகான தமிழ்

சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன், சிங்கப்பூரில் ஒளிபரப்பாகி வந்த வசந்தம் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். சரளமாக தமிழ் பேசுவதால் ரேடியோ தொகுப்பாளராகும் ஆசையில் சென்னை வந்தார். இதே போல ரேடியோ ஜாக்கியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவரின் வசிகர பேச்சும் குரலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

இதைடுத்து, சன் மியூசிக் தொடங்கப்பட்ட புதிதில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஆனந்த கண்ணனுக்கு கிடைத்தது. மிக விரைவிலேயே இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. இதையடுத்து, விக்ரமாதித்தன் என்ற சீரியல்களிலும் நடித்தார்.

சரோஜா படத்தில்

சரோஜா படத்தில்

சின்னத்திரையில் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்ற ஆனந்த கண்ணன், வெங்கட் பிரபுவின் சரோஜா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு இவருக்கு வெள்ளித்திரையில் கிடைக்காததால், மீண்டும் சிங்கப்பூரில் தனது பணியைத் தொடங்கினார். ஒரு வேளை வெள்ளித்திரையில் இவர் வெற்றி பெற்று இருந்தால், அனைவரும் கொண்டாடும் ஒரு பிரபல நடிகராக இருந்து இருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X