போகிற போக்கில் பொன்னம்பலத்தை சிறையில் தள்ளிய அனந்த் வைத்தியநாதன்: இது நியாயமே இல்ல

By Siva

Recommended Video

பிக் பாஸ் 2 - பொன்னம்பலம் எதற்காக சிறைக்கு சென்றார்?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பியபோது பொன்னம்பலத்தை சிறையில் தள்ளிவிட்டார் அனந்த் வைத்தியநாதன்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார் மமதி சாரி. இதையடுத்து அனந்த் வைத்தியநாதனை நேற்று வெளியேற்றினார்கள். அவர் வெளியே செல்லும் முன்பு அவருக்கு ஒரு அதிகாரம் கொடுத்தார் கமல்.

அதாவது தவறாக நடந்த யாராவது ஒருவரை சிறையில் தள்ளும் அதிகாரம் அனந்த் வைத்தியநாதனுக்கு கொடுக்கப்பட்டது.

அனந்த்

அனந்த்

தாங்கள் எந்த மாதிரியான உடை அணிய வேண்டும், ஆண்களுடன் எப்படி பழக வேண்டும் என்பது பெண்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது அவர்களை பற்றி தவறாக பேசிய பொன்னம்பலத்தை சிறையில் அடைக்குமாறு கூறுகிறேன் என்றார் அனந்த்.

கலாச்சாரம்

கலாச்சாரம்

பிக் பாஸ் வீட்டில் சில பெண்களும், ஆண்களும் நடந்து கொள்ளும் விதம் முகம் சுளிக்க வைக்கிறது என்று பார்வையாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அது குறித்து துணிச்சலாக பேசிய பொன்னம்பலம் கெட்டவராம்.

உண்மை

உண்மை

உண்மையாக நடங்கள். ஆனால் வரம்பு மீறி போக வேண்டாம். குழந்தைகளில் இருந்து பெரியவர்களை வரை பார்த்துக்கிட்டு இருக்கிறார்கள். அதனால் சட்டத்திற்கு கட்டுப்பட்டு மக்களுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியாக கொடுங்கள் என்று பொன்னம்பலம் தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து நீங்கள் கிளம்புவதாக இருந்தால் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கமல் கேட்டதற்கு அப்படி கூறினார்.

பாரம்பரியம்

பாரம்பரியம்

தவறு நடந்தாலும் திருத்திக் கொள்ளுங்கள். இந்த இடம் திருந்தத் தான். நம் தமிழ் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சொல்கிறேன். தமிழ் மக்கள் போகப் போக தமிழை மறந்துவிடுவார்கள் போன்று. தமிழையும் காத்து, தமிழ் பண்பையும் காக்க வேண்டும் என்றார் பொன்னம்பலம். இதை நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் சொல்லியிருந்திருப்பேன் என்றார் கமல்.

பிடிக்கவில்லை

பிடிக்கவில்லை

பொன்னம்பலம் கூறியதை கேட்டு பார்வையாளர்களே கை தட்டி அவரை பாராட்டினார்கள். கமல் கூட அவரின் பேச்சை ஆமோதித்தார். அப்படி இருக்கும் போது அவர் எப்படி கெட்டவராக ஆகிவிடுவார் அனந்த் வைத்தியநாதன்?

முதல் ஆளாக பொன்னம்பலத்தை சிறையில் தள்ளிய பிக் பாஸ்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X