Nayagi Serial:திருவுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்! ஆனந்தியா, அனன்யாவா?

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ரேட்டிங்ல முதலிடத்தில் இருக்கிறது. இருந்தாலும் கதை என்று பார்த்தால் ஒன்றுமே இருக்காது.

இயக்குநர் குமரன் கதையைவிட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தி, அந்தந்த வாரம் சீரியல் ரசிகர்களின் நாடிப் பார்த்து திரைக் கதையை அமைப்பார்.

இதுதான் குமரனுக்கு சக்ஸஸ் என்கிறார்கள் ,அவருக்கு நெருக்கமானவர்கள். ரெண்டு யூனிட் ஷூட்டிங் நடந்தாலும், அருகருகே நடப்பது போல பார்த்துக்கொண்டு ,திடீர் விசிட் அடித்து மானிட்டர் பார்ப்பதும் உண்டாம்.

கதைதான் என்ன

கதைதான் என்ன

நாயகி கதைதான் என்ன என்று பார்த்தால், அடிப்படைன்னு பார்த்தால் சொத்துதான். எஜமான் ஒருவரிடம் வேலைப் பார்த்த கலிவரதன் முதலாளியைக் கொன்று விட்டு, அவரது சொத்தை அபகரித்தததுதான். இந்த விஷயம் தெரிந்தது என்று பார்த்தால் கலிவரதனின் மனைவி வசந்திக்கு மட்டும்தான். வசந்திக்கு முதலாளியின் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்தது...அவர் இறந்தவுடன் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தது மட்டும்தான் தெரியும் .வேறு விவரமும் தெரியவில்லை.

ஆபத்து கலிவரதனுக்கு

ஆபத்து கலிவரதனுக்கு

கலிவரதனுக்கு இறந்து போன முதலாளியின் வாரிசுக்கு பிறக்கும் வாரிசால் ஆபத்து என்று குருநாதர் சொல்ல, முதலில் முதலாளியின் வாரிசு உயிரோடு இருப்பதே அப்போதுதான் அவருக்கு தெரிகிறது. வாரிசை கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அனன்யா கலிவரதன் காப்பாற்றி வச்சிருந்த ஒரு ஆளின் மூலமாக ஆனந்திதான் கலிவரதனின் வாரிசு என்று கண்டுபிடிச்சுடறா.

வாரிசு ஆனந்திதான்

வாரிசு ஆனந்திதான்

வாரிசு ஆனந்திதான் என்று அவன் சொன்னதும் கலிவரதன் வருவதற்குள், அந்த ஆளை கொன்னுட சொல்றா அனன்யா. கலிவரதன் வந்து வாரிசு யாருன்னு சொன்ன்னான்னு கேட்டதற்கு அனன்யா குடும்பமே சொல்லாமலே செத்து போயிட்டான்னு பொய் சொல்லிடறாங்க. ஆனந்திதான் சொத்துக்கு வாரிசுன்னு தெரிஞ்சா, கலிவரதன் திருவுக்கு என்னை கல்யாணம்பண்ணி வைக்கமாட்டார்னு அனன்யா பெத்தவங்ககிட்ட சொல்றா.

திருமுருகன் ஆனந்தி

திருமுருகன் ஆனந்தி

திருமுருகன் ஆனந்தி ரெண்டு பேருக்கும் கலிவரதன் சம்மதம் இல்லாமலே கல்யாணம் நடக்குது. முதலிரவு நடக்காமலிருக்க இவர்கள் என்னென்னவோ செய்தும், முதலிரவும் நடந்துருது. ஆனந்தி கர்ப்பமாவும் ஆகிடறா. இது திருவுக்கு தெரியலை. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்னு சொல்ற மாதிரி மண்டையில பந்து பட்டு, திருவுக்கு கடந்த 5 வருஷ நினைவுகள் மறந்து போகுது. அப்புறம் என்ன ஆனந்தியும் மறந்து போறா...அவ கூட செய்துகிட்ட கல்யாணமும் மறந்து போகுது. இப்போ அனன்யாவை கல்யாணம் செய்துக்க திரு ரெடியாகிட்டு இருக்கான்.

ஆனந்தியும், அவரை சேர்ந்தவர்களும் இந்த கல்யாணத்தை நிறுத்த பாடுபடறாங்க. இதுதான் கதை. இது எப்படி முதலிடத்தில் இருக்கும்னு கேட்டால் இயக்குநர் குமரனின் கைவண்ணம்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X