உங்க வேலையை நீங்க பாருங்க... என்ன இப்படி சொல்லிட்டாங்க விஜே அர்ச்சனா!
சென்னை : விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் பிரபலமான வீஜேவாக இருந்து வருபவர் அர்ச்சனா. நடிகையாகவும் இவர் படங்களில் தோன்றியுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் பிரபலமாக இருந்து வருகிறார். தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தன்னுடைய மகள் மற்றும் சகோதரியுடன் அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
பிரபல சேனலில் தற்போது தன்னுடைய மகளுடன் இணைந்து ஷோவை நடத்தி வருகிறார் அர்ச்சனா.

ஆங்கர் அர்ச்சனா
விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் பிரபலமான வீஜேவாக இருந்து வருபவர் அர்ச்சனா. இவர் நடிகையாகவும் டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இவருடன் இவரது மகளும் சிறப்பான ஆங்கராகவும் நடிகையாகவும் வலம் வருகிறார். இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். அர்ச்சனாவிற்கு அவரது நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அர்ச்சனாவின் யூடியூப் சேனல்
தனியாக யூடியூப் சேனலை நடத்திவரும் அர்ச்சனா, தன்னுடைய மகள் மற்றும் சகோதரியுடன் இணைந்து பல வீடியோக்களை அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் ஏராளமான பாலோயர்களும் காணப்படுகின்றனர். இது மட்டுமில்மல் இன்ஸ்டாகிராமிலும் அர்ச்சனா தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகிறார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அர்ச்சனா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நலன் தேறுவதற்காக ஏராளமான ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். தற்போது உடல்நலன் தேறியுள்ள அர்ச்சனா, தொடர்ந்து தன்னுடைய மகளுடன் இணைந்து ஷோக்களை செய்து வருகிறார். இதன்மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

ட்விட்டரில் அடுத்தடுத்த வீடியோக்கள்
இதனிடையே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என்ற பெயரில் அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இன்றைய தினம் இந்த தொடர்ச்சியின் 4வது வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யார் திட்டினாலும், பாராட்டினாலும் தன்னுடைய செயலை நிறுத்திக் கொள்ளாத சூரியனைப் போல நாமும் மற்றவர்களின் எந்த கமெண்டையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நமது வேலைகளை செய்ய வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை தத்துவம் சொன்ன அர்ச்சனா
ஒவ்வொருவரும் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை கொண்டுள்ளனர் என்றும் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அர்ச்சனா தெரிவித்துள்ளார். மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையே நினைத்துக் கொண்டிருக்காமல், நம்முடைய வாழ்க்கையை நாம் நம்முடைய சொந்த முயற்சியால் மேம்படுத்த வேண்டும என்றும் தெரிவித்துள்ளார் அர்ச்சனா.

இதுவும் கடந்து போகும்
மற்றவர்களின் விருப்பு வெறுப்புகள் மற்றும் நம்மை குறித்த அவர்களது விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல், இதுவும் கடந்து போகும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை நம்முடைய வேலைகளை நாம் கவனத்தில் கொண்டு வாழ்ந்தாலே நம்முடைய வாழ்க்கையை நாம் சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும் என்றும் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











