ஆத்தி.. பம்பு செட்டில் ஜாலி குளியல் போட்ட அஞ்சனா ரங்கன்.. செம்ம வீடியோ!

சென்னை: பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் ஹீரோயின் ரேஞ்சுக்கு உடைகள் அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை திணறவைத்து சமூக வலைதள பக்கங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் அஞ்சனா தற்போது, தண்ணீரில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சன் மியூசிக்கில் விஜேவாக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். அதில் மணிமேகலையுடன் சேர்ந்து அஞ்சனா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் இளசுகள் மத்தியில் மிகபெரிய அளவில் பிரபலமானது. இதையடுத்து இருவருமே ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தனர்.

Anjana Ranganathan instagram

தொகுப்பாளினி அஞ்சனா: மணிமேகலை திருமணத்திற்கு பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைக்க, மறுபுறம் அஞ்சனா ஜீ தமிழில் செட்டில் ஆனார். அதில் தொகுப்பாளராக பணியாற்றி பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதுதவிர தமிழ் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, சக்சஸ் மீட் போன்றவற்றிற்கும் அஞ்சனா தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

காதல் திருமணம்: தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் ஆனது. கயல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்கு பின் சில நாட்கள் சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்த அஞ்சனா தற்போது முழுமூச்சுடன் பல நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருக்கிறார்.

பம்ப் செட் குளியல்: விஜே அஞ்சனா, தொகுப்பாளினியாக மட்டுமின்றி மாடலிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது இவர் வயல்வெளியில் பம்புசெட்டில் குளிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், கேப்ஷனாக பம்ப் செட் குளியல் எனி டைம் நீச்சல் குளம் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X