ஒரு லுக் போதும்…மினிமல் ஸ்டைல், மேக்ஸிமம் கவர்ச்சி… பாவனா லேட்டஸ்ட் ஷூட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஒருகாலத்தில் தொகுப்பாளினிகளின் தனி உலகமே இருந்தது. குறிப்பாக விஜய் டிவியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு தொகுப்பாளினி ரசிகர்களின் மனதை ஆட்கொண்டனர். அந்த வரிசையில் ஆடல், பாடல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை உற்சாகமாக தொகுத்து வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் பாவனா பாலாகிருஷ்ணன். தற்போது இவர் பகிர்ந்து இருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினியான பாவனா, தனது சுறுசுறுப்பான பேச்சு, நேர்த்தியான ஆட்டிட்டியூட், ஸ்டைலான பிரெசென்டேஷன் இவற்றால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக தென்படவில்லை என்றாலும், தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளை தொகுத்து வழங்கி கலக்கி வருகிறார்.

தொகுப்பாளினி பாவனா: இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. நகரத்தின் உயரமான கட்டிடங்களை பின்னணியாக கொண்டு, ஸ்டைலான கருப்பு உடையில் பளிச் என முதுகு தெரியும்படி எடுத்துக்கொண்ட இந்த போட்டோக்கள், அவரது கிளாஸி மற்றும் மாடர்ன் லுக்கை வெளிப்படுத்துகின்றன. மினிமல் மேக்கப், எளிமையான அணிகலன்கள், நம்பிக்கையுடன் நிற்கும் போஸ் இந்த மூன்றும் சேர்ந்து அந்த போட்டோக்களை இன்னும் அழகாக மாற்றியுள்ளது. குறிப்பாக ஜன்னல் அருகே நகரத்தை நோக்கி நிற்கும் ஷாட்கள், ஒரு சினிமா ஃபீல் கொடுக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கவர்ச்சியான போஸ்: இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "சூப்பர் ஸ்டைல்", "ஹாலிவுட் லெவல் லுக்", "இன்னும் யங் & கிளாஸி" என கமெண்ட்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து கனெக்ட் ஆகி இருப்பது தான் பாவனாவின் ஸ்பெஷல் என்று சொல்லலாம். மொத்தத்தில், ஒரு சிம்பிள் போட்டோஷூட்டையும் ஸ்டைலிஷ் ஸ்டேட்மெண்டாக மாற்றியுள்ளார் பாவனா. இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, மீண்டும் ஒருமுறை அவரது ரசிகர் வட்டத்தை உற்சாகப்படுத்தி உள்ளார். பாவனாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் 807K பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











