முகத்தை மூடி.. கால்களை தூக்கி.. வெயிலுக்கு கூல் போஸ்.. இன்ஸ்டாவை அலறவிடும் பாவனா பாலகிருஷ்ணன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து, தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் பிரதான பெண் தொகுப்பாளராக உலகளவில் கலக்கி வரும் பாவனா பாலகிருஷ்ணன் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பாளினி ரசிகர்களின் நெஞ்சங்களை ஆட்கொள்வது வழக்கம். அந்த வரிசையில், டிடி, ரம்யா ஆகியோருக்குப் பிறகு தனது கணீர் குரலாலும், தனது திறமையாலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் தொகுப்பாளினி பாவனா.

விஜய் டிவி டூ கிரிக்கெட் கமெண்டரி: ஆனால், பாவனாவை தற்போது பெரிய அளவில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பார்க்க முடிவதில்லை. அதற்கு முக்கியக் காரணம், அவர் தனது ரூட்டை மாற்றி 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' தொலைக்காட்சியின் முதன்மை ஆங்கராக உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர்களைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஐபிஎல் (IPL) முதல் உலகக்கோப்பை போட்டிகள் வரை மைதானத்தில் இருந்தபடி ஜாம்பவான்களைப் பேட்டி எடுக்கும் ஒரே தமிழ் பெண் தொகுப்பாளினியாக உலகளவில் கலக்கி வருகிறார். இதுதவிர பெரிய பெரிய சர்வதேச கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மிகவும் பிஸியாக இருக்கிறார்.
பீச்சில் கூல் போஸ் : சமூக வலைதளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி பாவனா, உடற்பயிற்சி மற்றும் மாடர்ன் உடைகளில் ரீல்ஸ் செய்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். இந்நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #europeansummer என்ற கேப்ஷனுடன் ஒரு செம்ம ஹாட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். கடல் பின்னணியில் ஜொலிக்க, கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் படுத்துக்கொண்டு, தனது முகத்தைப் தொப்பியால் மூடி, கால்களை மட்டும் வான்நோக்கி தூக்கியபடி அலாதியான போஸ் கொடுத்துள்ளார். சம்மர் வெயிலை விட பாவனாவின் இந்த கூல் அண்ட் ஸ்டைலிஷ் போஸ் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது. இந்த போட்டோ தொகுப்பாளினி பாவனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து, சோசியல் மீடியா பேஜ்களில் செம்ம ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications