Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஐபிஎல் வீரர்களை வாழ்த்தி பாடல்… தானே இசையமைத்து அசத்திய பிரபல தொகுப்பாளினி!
சென்னை : 2021 ஆம் ஆண்டின் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் வரும் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது.
இதனை கொண்டாடும் விதத்தில் பிரபல தொகுப்பாளினி பாவானா 'மணி ஹெய்ஸ்ட்' பாடலை மையமாக வைத்து ஐபிஎல் பாடல் இசையமைத்து பாடியுள்ளார்.
அப்பாவின்
மூவ்
எல்லாம்
அதுக்காகத்தான்..
கண்டுகாதீங்க
என
ரசிகர்களுக்கு
கண்டிஷன்
போட்ட
மாஸ்
நடிகர்!
இந்த பாடல் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தொகுப்பாளினி பாவனா
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், "ஜோடி" போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார்.

ஐபிஎல் வீரர்களை வாழ்த்தி
19ந் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல் போட்டியை வரவேற்கும் விதமாக, மணி ஹெய்ஸ்ட் பாடலை மையமாக வைத்து ஒருபாடலை பாடி உள்ளார். அந்த பாடலில், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த பாடலுக்கு பாவனாவே இசையமைத்து உள்ளார். இந்த பாடல் கேட்பதற்கு மிகவும் ரசிக்கும்படி உள்ளதால் சி.எஸ்.கே ரசிகர்கள் இந்த பாடலை திரும்ப கேட்டு ரசித்து வருகிறார்கள்.
Recommended Video

ஏராளமான ரசிகர்கள்
உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்ட மணி ஹெய்ஸ்ட் நெட்பிளிஸ்ட் ஓடி தளத்தில் வெளியானது. வங்கி திருட்டை மையமாகக் கொண்ட மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் முதலிரண்டு பாகங்கள் 2017ம் ஆண்டு வெளியாகின. அடுத்த இரண்டு பாகங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. இதில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
UKE TIME! - IPL × MONEY HEIST
— Bhavna Balakrishnan (Bhavna__B) September 17, 2021
.
.
My two current obsessions!
I watched #moneyheist as I tried to work on #IPL2021:)
So I combined the two,wrote up the lyrics & made this one!
cskfansofficial fans will definitely get a kick out it 😛
Are you counting down the hours too? IPL pic.twitter.com/wEhnOEbCYH
இதுவும் நல்லாத்தான் இருக்கு
அதுமட்டுமின்றி இந்த தொடரில் வரும் டைட்டில் பாடல் உள்பட ஒரு சில பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளன. மணி ஹெய்ஸ்ட் பாடலை மையமாக வைத்து ஐபிஎல் வீரர்களை உற்சாகப்படுத்தி தொகுப்பாளினி பாவனா பாடிய பாடலை, மணி ஹெய்ஸ்ட் பிரியர்கள் கேட்டு அட இதுவும் நல்லாத்தான் இருக்கு என்று கூறி வருவின்றனர்.