டிடி-க்கு அந்த சேனல்ல என்ன வேலை..? ரசிகர்கள் ஆச்சரியம்!

By Vignesh Selvaraj

Recommended Video

டிடியின் புதிய அவதாரம் : விஜய் டிவி டூ ஜீ டிவி

சென்னை: சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான் விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'சரிகமப' நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

திவ்யதர்ஷினி

திவ்யதர்ஷினி

சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் திவ்யதர்தினி என்கிற டிடி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டவர். அவரது குறும்பான பேச்சுக்கும், நிகழ்ச்சியை நடத்தும் விதத்துக்கும் பலர்ர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

திவ்யதர்ஷினி விஜய் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்தது தான். இந்த சேனலை தவிர இவரை வேறு எந்த சேனலிலும் பார்க்க முடியாது. அப்படியிருக்க ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிடி பங்குபெற்றுள்ளார்.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ச்சனா தொகுப்பாளினியாக பணியாற்றும் 'சரிகமப' எனும் இசை நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைஞானி இளையராஜா சுற்று நடத்தப்படுகிறது. அதில் கௌதம் மேனனும், திவ்யதர்ஷினியும் கலந்துகொள்கிறார்கள்.

பாடும் கௌதம் மேனன்

பாடும் கௌதம் மேனன்

இந்த நிகழ்ச்சியில், கௌதம் மேனன், 'மேயாத மான்' படத்தின் 'எங்க வீட்டு குத்து விளக்கு.. நீ கிடைச்சா என் வாழ்க்கை கெத்து' பாடலை பாடி இருக்கிறார். வரும் சனி அன்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X