தூங்கும்போது எட்டி உதைச்சிட்டுதான் போவா.. மரியாதையா அப்படீன்னா.. நீயா நானா ஷோவில் ஆதங்கம்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான நீயா நானா தொடர்ந்து 10 ஆண்டுகளை கடந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பான மற்றும் ஒரே ஆங்கராக தொடர்ந்து நீடித்து வருகிறார் கோபிநாத்.
ஒவ்வொரு வாரமும் சிறப்பான பல டாப்பிக்குகளை இந்த ஷோ மூலம் கோபிநாத் கொடுத்து வருகிறார்.

நீயா நானா ஷோ
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது நீயா நானா ஷோ. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது நீயா நானா நிகழ்ச்சி.

தனித்துவமான டாப்பிக்குகள்
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான மற்றும் தனித்துவமான டாப்பிக்குகளை கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவதுதான் இதன் சிறப்பு. தொடர்ந்து ஒரே ஷோ, ஒரே ஆங்கருடன் சிறப்பான எபிசோட்களை தந்து வருவதும் நீயா நானா நிகழ்ச்சியின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு டாப்பிக்கை எடுத்துக் கொண்டால் அதன் இருதரப்பு நியாயங்களையும் கோபிநாத் இந்த நிகழ்ச்சியில் சமமாக கொண்டு செல்வார்.

இருதரப்பு நியாயங்கள்
இந்த ஷோ ஒரு விஷயத்தில் இருதரப்பு நியாயத்தை மட்டுமில்லாமல், அவற்றிற்கு பொதுவான விஷயங்களையும் நிபுணர்கள்மூலம் தந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சிறப்பான தலைப்புடன் களமிறங்கியுள்ளது நீயா நானா. நகரத்து அண்ணன் -தங்கைகள் மற்றும் கிராமத்து அண்ணன் தங்கைகள் இவர்களில் யார் சிறந்தவர்கள் என்று இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி விவாதிக்கவுள்ளது.

நிகழ்ச்சியை சிறப்பாக்கிய கோபிநாத்
நிகழ்ச்சியை வழக்கம்போல இருதரப்பினரையும் விவாதத்தில் போகிற போக்கில் பேச வைத்து நிகழ்ச்சியை சிறப்பாக்கினார் கோபிநாத். கிராமத்து அண்ணன் -தங்கைகள் ஒருவருக்காக ஒருவர் கண்கலங்குவது இயல்பாக நடக்கும் என்று அந்த தரப்பினர் தெரிவித்தனர்.

நகரத்து, கிராமத்து அண்ணன் -தங்கை
இதையடுத்து பேசிய நகரத்து அண்ணன் -தங்கை தரப்பினர், தற்போது எல்லா விஷயத்திற்கும் அழுவது பேஷனாகிவிட்டதாக தெரிவிக்க, சிரிப்பு, கோபம் போல அழுகையும் ஒரு எமோஷன்தான், அதை அடக்கி வைத்து பிபியை ஏன் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று நியாயமான விஷயத்தை கிராமத்து தரப்பினர் பதிவு செய்தனர்.

மரியாதை எதிர்பார்ப்பதில்லை
தொடர்ந்து பேசிய நகரத்து அண்ணன் -தங்கை தரப்பினர், தாங்கள் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை என்றும் தான் தூங்கும்போது தன்னுடைய தங்கை தன்னை எட்டி உதைத்துவிட்டுதான் போவாள் என்றும் குறிப்பிட்டனர். தொடர்ந்து இந்த தரப்பில் பேசிய மற்றொரு அண்ணன், தன்னை மற்றவர்கள் முன்னிலையில் வாடா போடா என்று தனது தங்கை கூப்பிடுவதை தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

அண்ணா என்பது இயல்பாக இல்லை
அண்ணா என்று கூப்பிட்டால் வேறு யாரையோ கூப்பிடுவது போல தோன்றுவதாகவும் நகரத்து தங்கைகள் பதிவு செய்தனர். இவ்வாறு இன்றைய தினம் ஒளிபரப்பான நீயா நானா ஷோ சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக காணப்பட்டது. இவர்களை மிகவும் நகைச்சுவையுடனும் அதே நேரத்தில் நேர்த்தியாகவும் கையாண்டு ரசிகர்களை கவர்ந்த கோபிநாத்.


Click it and Unblock the Notifications











