‘கிகி‘க்கு இப்படி ஒரு ஆசையா… நைசா மாமனாரிடம் சான்ஸ் !
சென்னை : ஒரு நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டுபோகும் மிகப்பெரிய பொருப்பு நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடம் இருக்கிறது. நிகழ்ச்சி சலிப்படையும் நேரத்தில் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை புகுத்தி அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திறமைசாலிகள் தொகுப்பாளர்கள்
அப்படி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கீர்த்தி என்கிற கீர்த்தி.
எப்போதும் சுறுசுறுப்புடனும்...கலகலப்புடனும் பேசும் கீர்த்தி தற்போது தனக்கு இருக்கும் ஆசையை நாசுக்காக கூறியுள்ளார்.

தொகுப்பாளினி
சின்னதிரையில் மானாட மயிலாட மற்றும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, மக்களின் ஃபேவரைட் தொகுப்பாளினி லிஸ்டில் இடம் பிடித்தவர் கீர்த்தி. இவரை கீர்த்தி என்று செல்வதை விட 'கிகி' என்று சொன்னால்தான் அனைவர்க்கும் பரீட்சையம்.

சாந்தனு மனைவி
பிரபல இயக்குநரும் பாக்யராஜின் மருமகளும் சார்மிங் நடிகர் சாந்தனுவின் மனைவியுமான இவர் நடனக் கலைஞரும்கூட. தனக்கென்று தனிப்பட்ட வகையில் நடனப் பள்ளியையும் திறந்திருக்கிறார். இந்நிலையில், தான் கணவர் சாந்தனுவோடு இணைந்து யூடியூப் சேனலில் இவர்கள் கொடுக்கும் கன்டென்ட் அனைத்தும் ட்ரெண்டடித்துக்கொண்டிருக்கின்றன.

தெளிவா ஒளறுவோம்
தற்போது இவர்கள், தெளிவா ஒளறுவோம் என்கிற பெயரில் புதிய பாட்காஸ்ட் நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கின்றனர். முதல் எபிசோடே லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்று, ட்ரெண்டிங்கில் இருக்கிறது. முழுக்க முழுக்க தங்களின் காதல் கதையை இதில் பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தில் ஆக்டிவ்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிகி அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் சிவப்பு நிற உடையில் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வரும் வருகின்றனர்.

கிகியின் ஆசை
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கொடுக்குற போஸ் எல்லாம் பார்த்த அடுத்து நீங்க ஹீரோயினுதான் போல என்று கேட்டு வருகின்றனர். அதற்கு அம்மணி, படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், என் மாமனார் பாக்யராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஆசையாக இருக்கு என்று நைசான தனது ஹீரோயின் ஆசையை முன்வைத்துள்ளார் கிகி. மாமனார் இயக்குனர், கணவர் ஹீரோ, அம்மணியின் ஆசையை யார் நிறைவேற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











