மணிமேகலையுடன் சண்டை போட்ட பிரியங்கா.. லீக்கான ஆடியோ? உண்மை என்ன?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.மேலும், குக்காக வந்தவர் ஆங்கர், தனது வேலையில் தலையிட்டதால் வெளியேறுவதாக கூறியிருந்தார். அவர் பிரியங்காவைத்தான் சொல்லுகிறார் என அனைவரும் கூறிவந்த நிலையில், குக் வித் கோமாளி செட்டில் இருவரும் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியை மணிமேலை தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த சீசனில் கோமாளியாக இருந்த இவர் இந்த சீசனில் தொகுப்பாளினியாக மாறி உள்ளார். இதில், பிரியங்கா தேஷ்பாண்டே குக்காக களமிறங்கி உள்ளார். விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில் இருந்து தொகுப்பாளினி மணிமேகலை திடீரென வெளியேறுவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

பணம் புகழை விட: என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்றார்.
அவர் பெரிய ஆளா: இதுகுறித்து, சீசனில் நான் தொகுப்பாளினியாக நுழைந்த நாள் முதலில் இருந்து நேற்று வெளியேறிய நாள் வரை பல பிரச்சனை பார்த்துவிட்டேன். நான் பேசுவதை தாண்டி எனக்கு தான் எல்லாமே தெரியும், நான் இந்த சேனலில் பெரிய தொகுப்பாளினி, நான் இதை பார்த்துக் கொள்கிறேன் என என்னுடைய வேலையில் மூக்கை நுழைத்தார். இதுகுறித்து, நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் கூறியபோது அவர்கள், என்னை சமாதானப்படுத்தி, அவரிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள், இல்லை என்றால் என் கேரியரே போய்விடும் என்றார்கள். எதுவானாலும் சரி, தன்மானம் தான் முக்கியம் என்று வந்துவிட்டேன் என்று பேசி இருந்தார்.
சண்டை ஆடியோ: இணையத்தில் இந்த விவகாரம் பெரும் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், மணிமேலை மற்றும் பிரியங்கா சண்டை போட்டுக்கொண்ட ஆடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. அதில், மணிமேகலை தேவையில்லாமல் ஏன் பேசுறீங்க, எனக்கு டிஸ்டர்ப் ஆகுது , எதற்கு கத்தி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்றும் பிரியங்காவை கேட்கிறார். அதற்கு பிரியங்கா சவுண்டு சரோஜா போல, ஏய் மணிமேகலை என்று கத்துவது போல ஆடியோவில் உள்ளது.
ஆனால், இது உண்மையான சண்டை ஆடியோ இல்லை, பேக் ஆடியோ என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாமரைச்செல்வியிடம் பிரியங்கா சண்டை போட்ட ஆடியோவை எடிட் செய்து இதில் சேர்ந்துள்ளனர். மணிமேலைக்கு பிரியங்கா மீது இருக்கும் கடுப்பை விட இணையவாசிகள் செம கடுப்பில் இருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











