இனி குக் வித் கோமாளியில் நான் வரமாட்டேன்.. நானே வருவேன் கெட்டப்பில் அறிவித்த மணிமேகலை!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 4வது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து கோமாளியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஆங்கர் மணிமேகலை.
பிரபல சேனலில் ஆங்கராக இருந்த இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்மூலம் விஜய் டிவியில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது 4வது சீசனை துவக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காமெடியும், சமையலும் கலந்து ரசிகர்களுக்கு விருந்தாக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தங்களது மனஉளைச்சலுக்கு மருந்தாவதாகவும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி
இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சி நிறைவு செய்துள்ளது. நிகழ்ச்சியின் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்கின்றனர். குறிப்பாக வெங்கடேஷ் பட், கோமாளிகளுடன் இணைந்து குக்குகளை கலாய்ப்பதும், கோமாளிகளை ஓட ஓட விரட்டுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி
தற்போது துவங்கியுள்ள இந்த நிகழ்ச்சியின் 4வது சீசனில் ஆரம்பம் முதலே பாலா இடம்பெறவில்லை. இதனிடையே பேமஸ் கோமாளியாக ரசிகர்களை கடந்த சீசன்களில் கவர்ந்துவந்த நடிகை ஷிவாங்கி, இந்த சீசனில் குக்காக மாறியுள்ளார். கடந்த வாரங்களில் இவர் தனது சமையல் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

மணிமேகலையின் வெளியேறும் முடிவு
இந்நிலையில் கடந்த 3 சீசன்களில் சிறப்பான கோமாளியாக மாறி ரசிகர்களை கவர்ந்த மணிமேகலை, இந்த சீசனிலும் கோமாளியாகவே களமிறங்கினார். இந்நிலையில், அவர் இன்றைய தினம் தனது இறுதி எபிசோட் என்றும், நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறுவதாகவும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மணிமேகலை நானே வருவேன் கெட்டப்
இனிமேல் நான் வர மாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப்பில் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த கடினமான முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் துவங்கிய தன்னுடைய கோமாளி பயணத்தில் அதிகளவில் அன்பை கொடுத்த ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிக அன்பை கொடுத்த ரசிகர்கள்
தனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் பெஸ்டாக இருப்பதற்காக தான் அதிகமாக மெனக்கெட்டுள்ளதாகவும் அதற்கு ரசிகர்கள் எதிர்பார்க்காத அன்பை கொடுத்துள்ளதாகவும், அது தான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

மணிமேகலையின் ஆங்கர் கனவு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த போதிலும், தன்னுடைய ஆங்கர் கனவை அவ்வப்போது நிகழ்ச்சியின் இடையில் வெளிகாட்டி வந்தார் மணிமேகலை. நிகழ்ச்சியின் ஆங்கரான தர்ஷனை கலாய்க்கும் வகையில், தன்னுடைய ஆங்கர் கனவையும் வெளிப்படுத்தினார். அவர் தொடர்ந்து ஆங்கராக தொடர்வாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











