மரியாதை இல்லாத இடத்துல இருக்க மாட்டா இந்த மணிமேகலை.. குக் வித் கோமாளியில் இருந்து விலகி அதிர்ச்சி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியில் ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக மிப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

கோமாளியாக முதல் சீசனில் இருந்தே செயல்பட்டு வந்தவர் மணிமேகலை. இவர் இந்த சீசனில் இருந்து ஆங்கராக மாறியுள்ளார். தர்ஷனுடன் இணைந்து இவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் குக்காக இருந்துவரும் மற்றொரு ஆங்கருடன் தொடர் சின்ன சின்ன மோதலில் மணிமேகலை இருந்ததாக கூறப்பட்டு வந்தது. தற்போது இதை மணிமேகலை உறுதி செய்துள்ளார்.

manimegalai cwc show

ஆங்கர் மணிமேகலை: சன் மியூசிக்கில் ஆங்கராக தன்னுடைய கேரியரை துவங்கியவர் மணிமேகலை. சேட்டரிங் பாக்ஸாக மாறி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும் இவரது பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், தொடர்ந்து விஜய் டிவியில் இணைந்தார் மணிமேகலை. தொடர்ந்து மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக முதல் சீசனிலேயே இணைந்தார். தொடர்ந்து மீடியாவில் 12 ஆண்டுளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் மணிமேகலைக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

குக் வித் கோமாளி ஷோவிலிருந்து விலகல்: கடந்த 2017ம் ஆண்டில் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் மணிமேகலை. தொடர்ந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்துவரும் இவர் சமீபத்தில் தன்னுடைய புது வீடு குறித்த அப்டேட்டையும் பதிவிட்டிருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக கோமாளியாக இருந்துவந்த இவர், இந்த சீசனில்தான் ஆங்கராக மாறி தர்ஷனுடன் இணைந்து ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் விலகவுள்ளதாக அதிர்ச்சி முடிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை அறிவித்துள்ளார்.


சுயமரியாதை முக்கியம்: எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் அதில் தான் 100 சதவிகிதம் டெடிகேஷனுடன் பணியாற்றி வருவதாகவும் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அதே போன்று தான் செயல்பட்டதாகவும் மணிமேகலை குறிப்பிட்டுள்ளார். ஆனால் புகழ், பணம், வாய்ப்பு என எதற்காகவும் தன்னுடைய சுயமரியாதையை தான் இழக்க தயாராக இல்லை என்றும் தன்னுடைய வாழ்க்கையின் பல கட்டங்களிலும் இதை கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சுய மரியாதைக்கு முன்பு அனைத்துமே இரண்டாம்பட்சம் என்பதால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் மணிமேகலை குறிப்பிட்டுள்ளார்.

ஆதிக்கம் செலுத்தும் குக்: இந்த சீசனில் குக்காக இருக்கும் மற்றொரு ஆங்கர் தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் மணிமேகலை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தான் ஒரு குக் என்பதை மறந்துவிட்டு ஆங்கருக்கான செயல்பாடுகளில் அவர் தொடர்ந்து தலையிட்டு வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் தன்னுடைய வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை என்றும் இதுகுறித்து கேட்பதும் இந்த சீசனில தவறாக பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தான் எவர் குறித்தும் கவலைக் கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய உரிமையை கேட்டு வருவதாகவும் மணிமேகலை கூறியுள்ளார்.

ஆங்கராக 15 ஆண்டுகள்: தான் இதுவரை உற்சாகமாக செயல்பட்ட மற்ற சீசன்கள் போல இந்த சீசன் அமையவில்லை என்றும் மணிமேகலை கூறியுள்ளார். அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை எடுததுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான் ஆங்கராக 15 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் ஆனால் இதுபோன்ற அனுபவம் தனக்கு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ள மணிமேகலை, அந்த ஆங்கருக்கு அதிகமான நிகழ்ச்சியை செய்ய வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்றும் அப்போதுதான் அவர் மற்றவர்கள் வாய்ப்புகளில் தலையிட மாட்டார் என்றும் கூறியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நல்ல நிகழ்வுகளை மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X